மயோசிடிஸ் நோய் : தனது பூனையுடன் தெரபி எடுத்த சமந்தா – அப்படி என்ன தெரியுமா?

0
394
- Advertisement -

பூனையுடன் சேர்ந்து நடிகை சமந்தா ரெட் லைட் தெரப்பி எடுத்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், இவர் லீட் ரோலில் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை.

-விளம்பரம்-

குறிப்பாக கடந்த ஆண்டு இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. அதன் பின் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் சமந்தா நடித்து இருந்தார். காதல் ஆக்ஷன் பாணியில் உருவான இந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சமந்தாவிற்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது. இதனிடைய சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார்.

- Advertisement -

சமந்தா குறித்த தகவல்:

இவர்கள் இருவரும் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பே இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பிறகு சமந்தா தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார். இது ஒருபுறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

மயோசிடிஸ் நோய்:

இது ஒரு வகையான தசைய அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தாவால் பூரணமாக குணமடையவில்லை. மேலும், கடந்த ஆண்டு அந்த நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை சமந்தா திருப்பிக் கொடுத்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

-விளம்பரம்-

கம்பேக் கொடுக்கும் சமந்தா:

பின் சமந்தா தீவிரமாக சிகிச்சை எடுத்து இருந்தார். மேலும், மன நிம்மதிக்காக சமந்தா சுற்றுப்பயணம் சென்று இருந்தார். தற்போது இவர் பூரணமாக குணமடைந்து ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்கிறார். மீண்டும் இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இவர் பாலிவுட், கோலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடிப்பதற்கு ஆர்வமாக காட்டியிருக்கிறார்.

சமந்தா பதிவிட்ட வீடியோ:

இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் நடிகை சமந்தா சிகிச்சை எடுத்து வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமந்தா அவர்கள் தற்போது ரெட் லைட் தெரபி சிகிச்சை எடுத்திருக்கிறார். இந்த தெரப்பி சருமத்தில் உள்ள திசுக்களை புதுப்பிக்க கூடியது. இதனால் சமந்தா தான் வளர்க்கும் பூனையுடன் சேர்ந்து இந்த தெரபியை எடுத்திருக்கிறார். மேலும், இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ரெட் லைட் தெரப்பி டேட் என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement