அந்த படம் வெளியான போது நீங்கள் எல்லாம் எங்கிருந்தீங்க? ரசிகர்கள் குறித்து பேட்டியில் புலம்பிய சம்மு.

By ·

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது. இந்த வருட தொடக்கத்திலேயே நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த ஜானு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ‘யே மாய சேஸாவே’ என்னும் தெலுங்கு படத்தின் மூலம் தான் சமந்தா ஹீரோயினாக சினிமா உலகிற்கு அறிமுகமாகினார். இந்த படத்தை தமிழில் கௌதம் மேனன் அவர்கள் சிம்பு, திரிஷா ஆகியோரை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தலைப்பில் இயக்கினார்.

இந்த படம் தெலுங்கில் சிம்பு கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்திருந்தார்கள். தமிழில் இந்த படம் எந்த அளவிற்கு ஹிட் கொடுத்ததோ அதே போல் தெலுங்கிலும் வேற லெவல்ல தெரிக்கவிட்டது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் வெளியாகி 10 வருடங்களை கடந்து இருப்பதை தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் நடிகை சமந்தாவிடம் ரசிகர்கள் கௌதம் மேனனிடம் இருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று கேள்வி கேட்டார்கள்.

இதையும் பாருங்க: துணை இயக்குனராக இருந்த போது கௌதம் மேனன் நடித்த முதல் காட்சி. அதுவும் இந்த படத்தில்.

அதற்கு சமந்தா அவர்கள் கூறியது, கௌதம் மேனனுக்கு கட் சொல்லுவதே பிடிக்காது. கேமரா எப்போதும் ஆனிலேயே இருக்கும். காட்சிகளை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருப்பார். எனக்கு சினிமாவில் நடிக்கும் போது சுத்தமாகவே தெலுங்கு தெரியாது. தெலுங்கை நான் கவுதம் மேனனிடம் தான் கற்றுக் கொண்டேன். படத்தின் காட்சி எடுக்கும் போது என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அதற்கு நிறைய தன்னம்பிக்கையும் வேணும். ரசிகர்கள் நம் ஆன்மாவை பார்க்க வைக்க வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். கௌதம் மேனன் எனக்கு அதை கற்றுக் கொடுத்து உள்ளார். இதை செய்வது மிகவும் கடினம்.

அது மட்டும் இல்லாமல் கேமரா இருப்பதையும் நாம் மறக்க முடியாது. கேமரா இல்லாதது போலவே நடிக்க வேண்டும். நான் முழுக்க முழுக்க டயலாக் சொல்வதிலேயே கவனம் செலுத்து இருந்தேன். வேகமாக என் டயலாக்கை பேசி விட்டு காட்சியை முடித்து விட்டதாக நினைத்தேன். கௌதம் மேனன் அவர்கள் ஒரு படத்தின் காட்சி என்பது வசனம் மட்டும் பேசினால் இல்லை என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார். நீங்கள் பேசும் போது ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி முக்கியம் என்பதையும் புரிய வைத்தார்.

மீண்டும் நான் அவர் இயக்கத்தில் நீதானே என் பொன்வசந்தம் என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் அவருடன் பணியாற்றும் போது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியான நாளில் ரசிகர்கள் எனக்கு செய்திகளை அனுப்புவார்கள். அப்போது என் மனதுக்குள் படம் வெளியான போது நீங்கள் எங்கிருந்தீர்கள் என எனக்குக் கேட்கத் தோன்றும் என்று கூறினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full