துணை இயக்குனராக இருந்த போது கௌதம் மேனன் நடித்த முதல் காட்சி. அதுவும் இந்த படத்தில்.

0
1366
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் நடிகர், திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், ஒலிச்சேர்க்கை கலைஞர் என பல முகங்களை கொண்டவர். இவர் இயக்கத்தில் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இயக்குனர் இவர் அனுஷ்கா, மாதவனை வைத்து “நிசப்தம்” என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படம் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்கள். அதோடு தற்போது இவர் மலையாளத்தில் ட்ரான்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் மேனன் அவர்கள் முதன் முதலாக சினிமாவில் நடித்த படத்தின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. கௌதம் மேனன் அவர்கள் முதன் முதலாக நடித்த படம் மின்சார கனவு. இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் மின்சார கனவு.

- Advertisement -

இந்த படத்தில் அரவிந்த்சாமி, பிரபு தேவா, கஜோல், எஸ் பி பாலசுப்ரமணியம், நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்திருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. மேலும், இந்த படத்தில் தான் கௌதம் மேனன் அவர்கள் முதன் முதலாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இவர் ராஜீவ் மேனன் உடன் அசிஸ்டன்ட் ஆகவும் பணிபுரிந்து இருக்கிறார்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் பிரபுதேவா தற்கொலை செய்து கொள்ள இருக்கும் ஒரு பெண்ணை காப்பாற்றுவார். அப்போது அரவிந்த் சாமி இடம் சரியான ஆள்பா பேசியே அந்த பெண்ணை கரெக்ட் பண்ணி காப்பாற்றி விட்டாய் என்று சொல்வார். அப்படி அரவிந்த்சாமி சொல்லும் காட்சியில் அரவிந்த்சாமி பக்கத்தில் கவுதம் மேனன் நின்று கொண்டிருப்பார். இந்த புகைப்படம் பல வருடங்களுக்கு பிறகு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தில் கௌதம் மேனன் நடித்திருக்கிறாரா!! என்று வியப்பில் கேட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement