”படுக்கையறையில் கூட” நாக சைத்தன்யாவின் முதல் மனைவி குறித்து பேசிய சமந்தா.

0
563
nagachaitanya
- Advertisement -

நாக சைதன்யா பிறந்தநாளில் அவருடைய முன்னாள் மனைவி சமந்தா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா இருவரும் தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்ததன் மூலம் நண்பர்களாக பழகத் தொடங்கினார்கள். பின் சமந்தா- நாக சைதன்யா இருவரும் காதலித்த விவகாரம் வெளியே வர துவங்கியது. இதனை அடுத்து இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

ஆனால், இருவரும் விவாகரத்து குறித்த காரணத்தை தெரிவிக்கவே இல்லை. விவாகரத்து பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.

யசோதா படம்:

அந்த வகையில் இவர் சாகுந்தலம், திரில்லர் கதை அம்சம் கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்போது சமந்தாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘யசோதா’. இந்த படத்தில் சமந்தாவுடன் படம் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

சமந்தாவை பாதித்த நோய்:

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனிடையே திடீரென நடிகை சமந்தாவிற்கு Myositis எனப்படும் Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டு இருந்தார். தற்போது இதிலிருந்து குணமடைந்து இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் நாக சைதன்யா பிறந்தநாளில் அவருடைய முன்னாள் மனைவி சமந்தா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

படுக்கையறை குறித்து சமந்தா சொன்னது:

அதாவது, நேற்று நாக சைதன்யா அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது பேட்டி ஒன்றில் நாக சைதன்யா குறித்து சமந்தா பேசிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் சமந்தா, படுக்கை அறையில் நாக சைதன்யாவின் முதல் மனைவி தலையணை தான். நாக சைதன்யாவை கிஸ் செய்வதென்றாலும் எங்களுக்கு இடையில் தலையணை இருக்கும் என்று சமந்தா தெரிவித்து இருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Advertisement