அடேங்கப்பா, சுவிட்சர்லாந்தில் சமந்தா அணிந்த இந்த ஆடையின் விலை மட்டும் இத்தனை லட்சமா?

0
434
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கலக்கி கொண்டு இருக்கிறார். அதோடு இவர் அணைத்து மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார். மேலும், திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு முழுவதும் இது குறித்து தான் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார். பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார். இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

சமந்தா நடித்த படங்கள்:

அதிலும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த புஸ்பா படத்தில் சமந்தா ஆடிய இருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் என்ற பெயரில் உருவாகி வரும் படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.

சமந்தாவின் சுற்றுலா பயணம்:

இப்படி சமந்தா பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கமிருக்க, பொதுவாகவே சமந்தா அதிகமாக சுற்றுலா பயணம் செல்வார். அதிலும் விவாகரத்துக்கு பிறகு அதிகம் வெளிநாட்டு பயணங்கள் சென்று கொண்டிருக்கின்றார். சமீபத்தில் நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து சுற்றுலா பயணத்தில் இருக்கிறார். இது சமந்தாவின் மற்ற சுற்றுலா பயணத்தை போல இல்லாமல் ஒரு புதுவிதமான சுற்றுலா பயணம். அது என்னவென்றால்,

-விளம்பரம்-

சுவிட்சர்லாந்து சுற்றுலா பயணத்தில் சமந்தா:

சுற்றுலா பயணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் பயிற்சி வகுப்புகளிலும் சமந்தா கலந்து இருக்கிறார். சுவிட்சர்லாந்தில் நடந்த பனி சறுக்கு வகுப்புகளில் கலந்து கொண்ட சமந்தா தான் பயிற்சி எடுத்துக்கொண்ட காணொளியையும், தனது பனிச்சறுக்கு பயிற்றுவிப்பாளர் கேத்வுடன் இருந்த அனுபவத்தையும், புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார். சமந்தாவின் வீடியோ, புகைப்படம் எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி இருந்தது.

சமந்தா அணிந்திருக்கும் ஆடையின் விலை:

இந்நிலையில் சமந்தா பதிவிட்ட புகைப்படத்தில் சமந்தாவின் ஆடை குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சமந்தா அந்த புகைப்படத்தில் அணிந்திருக்கும் ஆடை Moncler என்ற விலையுர்ந்த Jacket. அந்த ஒரு ஜாக்கெட் விலை மட்டும் ரூ.1,21,012 இருக்குமாம். இதை கேட்டு ரசிகர்கள் பலரும் வாயை பிளந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு விலை உயர்ந்த ஜாக்கெட்டை சமந்தா போட்டிருக்கிறார். தற்போது சமந்தா போட்டிருக்கும் Jacket. புகைப்படமும் விலையும் தான் சோஷியல் மீடியாவில் அதிகமாக பரவலாகி வருகிறது.

Advertisement