அன்னிக்கி அப்படி சொன்னீங்க இப்போ இது என்ன ? சமந்தாவின் பழைய டீவீட்டில் தற்போது கழுவி ஊற்றும் ரசிகர்கள்

0
352
samantha
- Advertisement -

அல்லு அர்ஜுன் நடித்து இருக்கும் ‘புஷ்பா’ படத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸ் பாடலின் வீடியோ நேற்று வெளியாகி இருந்தது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தன் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்து இருந்தார். விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னர் நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும், முதன் முறையாக பாலிவுட் படத்தில் கூட நடிக்கப்போவதாக கூட கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா, முதன் முறையாக ஐட்டம் பாடல் ஒன்றில் நடனமாட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. தெலுங்கு சினிமா உலகில் ஸ்டைலிஷ் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. படத்தில் அல்லு அர்ஜுன் அவர்கள் லாரி டிரைவராக நடிக்கிறார்.

இந்த படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அதற்கு அவருக்கு 1.5 கோடிகள் சம்பளம் பெற்றதாவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இந்த பாடல் வெளியான பின்னர் சமந்தாவின் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்து இருந்தாலும், அவரது ஹேட்டர்ஸ்கள் அவரை கேலி செய்து வருகின்றனர். விவாகரத்து பின்னர் சமந்தா இப்படி ஐட்டம் பாடலில் ஆடியுள்ளது தேவை தானா என்று கேலி செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா கடந்த பல ஆண்டுக்கு முன்னர் மகேஷ் பாபுவின் தெலுகு பட போஸ்டர் பற்றி போட்ட கமன்ட் தற்போது வைரலாகி வருகிறது.

அதில், விரைவில் வெளியாக இருக்கும் ஒரு படத்தின் போஸ்டரை பார்த்தேன். அது மிகவும் கீழ் தரமாக இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார். சமந்தா குறிப்பிட்டு இருக்கும் அந்த போஸ்ட்ர், அப்போது வெளியான மகேஷ் பாபு படத்தின் ஒரு போஸ்டர் தான் என்று அப்போது மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமந்தாவை திட்டி தீர்த்து வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் நேற்று ‘புஷ்பா’ படத்தில் இருந்து வெளியான சமந்தாவின் ஐட்டம் பாடலை குறிப்பிப்பிட்டு சமந்தாவை கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், சமந்தா இதுவரை மோசமான காட்சிகளில் நடித்த புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு இதெல்லாம் கீழ் தனமாக இல்லையா என்று சமந்தாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement