அன்னிக்கி அப்படி சொன்னீங்க இப்போ இது என்ன ? சமந்தாவின் பழைய டீவீட்டை தற்போது கழுவி ஊற்றும் ரசிகர்கள்

0
1906
Samantha
- Advertisement -

டோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா . தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகர் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர்.

-விளம்பரம்-

அதனை அடுத்து இவரது நடிப்பில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதிலும் அந்த படத்தில் இடம் பெற்ற “இன்கேம் இன்கேம் கவாளி” என்ற பாடல் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என அணைத்து ரசிகர்களையும் ஈர்த்திருந்தது. இப்படி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய் தேவர்கொண்டா ‘லைகர்’ படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து தற்போது விஜய் தேவர்கொண்டா ‘குஷி’ படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘குஷி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இதற்கு முன் இருவரும் இணைந்து மகாநடி திரைப்படத்தில் நடித்திருந்தனர்.அதை தொடர்ந்து தற்போது குஷி திரைப்படத்தில் இரண்டாவது முறையாக ஜோடியாக நடிக்கிறார்கள். இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து ‘நா ரோஜா நுவே’ எனும் முதல் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து குஷியின் இரண்டாவது பாடல் ஆராதயா நேற்று மாலை வெளிவந்தது. இப்படத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா கணவன், மனைவியாக நடித்துள்ளனர். அதை காட்டும் விதமாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமான ரொமான்ஸ் காட்சியில் சமந்தா நடித்துள்ளார். அந்த காட்சிகளும் இந்த லிரிகள் பாடல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

youtube தளத்தில் இப்பாடல் தான் தற்போது படுவைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் சமந்தாவின் பழைய பதிவால் தற்போது கேலிக்கு உள்ளாகி வருகிறது. இந்த பாடலில் சமந்தா மீது விஜய் தேவர்கொண்டா கால் போட்டு அமர்ந்து இருப்பது போல ஒரு காட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்த நிலையில் சமந்தாவின் பழைய ட்வீட் ஒன்றை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருக்கின்றனர்.

நடிகை சமந்தா கடந்த பல ஆண்டுக்கு முன்னர் மகேஷ் பாபுவின் தெலுகு பட போஸ்டர் பற்றி கமண்ட் ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘விரைவில் வெளியாக இருக்கும் ஒரு படத்தின் போஸ்டரை பார்த்தேன். அது மிகவும் கீழ் தரமாக இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார். சமந்தா குறிப்பிட்டு இருக்கும் அந்த போஸ்ட்ர், அப்போது வெளியான மகேஷ் பாபு படத்தின் ஒரு போஸ்டர் தான் என்று அப்போது மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமந்தாவை திட்டி தீர்த்து வந்தனர்.

தற்போது குஷி படத்தில் சமந்தா இப்படியான காட்சிகளில் நடித்து இருப்பதை சுட்டிக்காட்டி சமந்தாவை நெட்டிசன்கள் பலரும் படு கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே சமந்தா, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார். அப்போது கூட சமந்தாவின் இதே ட்வீட்டை பகிர்ந்து பலரும் கேலி செய்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement