சமந்தா குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த வதந்தி.! நக்கலாக ட்வீட் செய்துள்ள சம்மு.!

0
976
Samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. பல இளைஞரகளின் கனவுக்கன்னியாக இருந்த சமந்தா தெலுங்கு நடிகரும் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

-விளம்பரம்-

திருமணம் முடிந்த பின்னர் சமந்தா திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் சமந்தா அதன்பின் தான் ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போதும் தெலுங்கு தமிழ் திரையுலகில் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்க : உள்ளாடையை வெளிச்சம் போட்டு காண்பித்து போஸ் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வா.! 

- Advertisement -

இந்நிலையில் சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் வதந்தி ஒன்று கிளம்பியுள்ளது. சமந்தாவின் ட்விட்டரில் அவருடைய பெயர் பேபி அகினேனி என்று மாற்றியுள்ளதுதான் இந்த வதந்திக்கு காரணம். இதை வைத்து பலரும் சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்திகள் போட கடுப்பான சமந்தா. 

சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ‘சமந்தா கார்ப்பமாக இருக்கிறாரா?’ என்று ஒருவர் பதிவிட்ட செய்திக்கு,  அதனை கண்டு சற்றும் கோபப்படாமல் மிகவும் சாதுர்யமாக பதிலைத்துள்ளார் சமந்தா அதில், “நான் கர்ப்பமாக இருக்கனா? எப்போது அதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் எங்களுக்கும் சொல்லுங்கள்” கமெண்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-

நடிகை சமந்தா இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ஒ பேபி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக தனது பெயரை ட்விட்டரில் பேபி சமந்தா என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளார்.

Advertisement