விவாகரத்து விவகாரம் - நாய் புகைப்படத்தை போட்டு மீடியாவை கலாய்த்த சமந்தா.

By Rajkumar · 4/9/2021

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கிறிஸ்துவ, இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

திருமணத்துக்கு பின்னரும் சமந்தா அவர்கள் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். குடும்பத்திலும் நல்ல மருமகள் என்ற பெயரையும் எடுத்து வருகிறார். மேலும்,ட்விட்டரில் தன்னுடைய கணவரின் குடும்பப்பெயரான அக்கினேனியை தன் பெயருக்கு பின் சேர்த்து சமந்தா அக்கினேனி என்று மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமந்தா ட்விட்டரில் தன் பெயரை முழுமையாக நீக்கி விட்டு ஆங்கில எழுத்தான ‘S’ என்று மாற்றியுள்ளார். சமந்தா எதை நினைத்து இதை மாற்றினாரோ? இதுகுறித்து தெலுங்கு மீடியாக்களில் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும், சமந்தா தன் தோழி வீட்டில் இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் பாருங்க : நான் கர்ப்பமா இருக்கும் போது கெளதமி மேடம் சாமி கும்பிட்டுட்டு சாபம் விட்டாங்க - திருமதி செல்வம் அபி.

ஆனால், இதுகுறித்து சமந்தாவும், நாக சைதன்யாவும் எதுவும் கூறவில்லை. இதற்கிடையில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நாகர்ஜுனா பிறந்தநாள். நாகர்ஜுனாவுக்கு, சமந்தா வாழ்த்து சொல்கிறாரா என தெலுங்கு மீடியாக்கள் காத்திருந்த நிலையில் மீடியாக்கள் வாயை அடைக்கும் வகையில் சமந்தா போஸ்ட் ஒன்று போட்டு உள்ளார். அதில் அவர் 'உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எப்பொழுதும் உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்க வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கூடங்களை விமர்சிக்கும் விதமாக மீம்ஸ் ஒன்றை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நாய் ஒன்று ஆக்ரோஷமாக இருக்கும் புகைப்படத்தை ஊடகங்கள் குறித்து கூறப்படுவது என்றும் அமைதியாக இருக்கும் நாய்களின் புகைப்படத்தை ஊடகத்தின் உண்மை நிலை என்றும் குறிப்பிட்டு உள்ளார். சமந்தாவைப் பற்றி ஊடகங்கள் வெளியிட்ட செய்தி குறித்து இவர் இப்படி விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full