தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்த நாக சைதன்யா – சமந்தா ஜோடி விவகாரத்து பெற இருப்பதாக கடந்த அக்டொபர் 2 ஆம் தேதி அறிவித்து இருந்தனர். சமந்தாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சமந்தாவின் முன்னாள் காதலரான சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ’பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில் ஏமாற்றுபவர்கள்  ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்’ என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும் சமந்தாவை தான் சித்தார்த் சூசகமாக குறிப்பிடுகிறார் என்று கமன்ட் செய்து வந்தனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சித்தார்த்துடன் சேர்ந்து ‘ஜபர்தஸ்த்’ எனும் டோலிவுட் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின்னர் நடிகை சமந்தாவுக்கும் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் டேட்டிங் செய்தும், ஊர் சுற்றிக் கொண்டும் இருந்தார்கள். இது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டது. பின் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் நடிகை சமந்தா காதலுக்கு குட்பை சொல்லி இருந்தார்.

இதையும் பாருங்க : அவ சொன்னது எல்லாம் – பிக் பாஸில் கதறிய நமீதாவின் அம்மா மற்றும் அப்பாவின் முதல் பேட்டி.

Advertisement

மேலும், சமந்தாவை பிரிந்த பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையில் இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்ன்னு எழுதி இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை கண்ட பலர் சமந்தாவை தான் மறைமுகமாக கூறுகிறார் என்று கருதினர்.

அதே போல சமந்தாவின் விவகாரத்துக்கு பின்னர் இன்ஸ்டா பக்கத்தில் சித்தார்த் ‘ஏமாற்றப்பட்டவர்களின் கண்ணீரில் இருந்து உங்கள் புன்னகையை உண்டாகதீர்கள். மற்றவரின் உண்மையான பயத்தை வைத்து நீங்கள் கனவு காணதீர்கள் வாழ்க்கை என்பது ஒரு கர்மா’ என்று பதிவிட்டு பின்னர் அந்த பதிவை நீக்கினார். இப்படி சித்தார்த் போடும் அனைத்தும் பதிவிற்கும் சமந்தாவுடன் முடிச்சி போட்டனர்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சித்தார்த் இதுகுறித்து விளக்கமளிகையில், யாரையும் மனதில் வைத்து அந்த ட்வீட்டை போடவில்லை. பல வருடங்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவர் சொல்லித் தந்ததை வைத்து அதனைப் போட்டேன். என்னுடைய மகா சமுத்திரம் படம்கூட அப்படியான ஒரு விஷயத்தைத்தான் கையாண்டிருக்கிறது. யாருடைய பெயரையும் தேவையில்லாமல் இழுக்காதீர்கள்.

Advertisement

என்னுடைய ட்வீட் தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை. சமூகவலைத்தளத்தில் வரும் யூகங்களுக்கு நான் பொறுப்பல்ல என்று கூறி இருந்தார். மேலும், இதுகுறித்து பேசிய சித்தார்த், தெருநாய்களைப் பற்றி நான் டுவீட் செய்தால், அது அவர்களுக்கானது என்று மக்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல என்றும் கூறியுள்ளார் சித்தார்த்.

Advertisement