சமந்தா அணிந்த சர்ச்சை வாசகம் அடங்கிய இந்த ஒற்றை டி – ஷர்ட்டின் விலை மட்டும் எவ்ளோ தெரியுமா ?

0
494
samantha
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சமந்தா குறித்து ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது சமந்தா போட்டு இருக்கும் டீ-ஷர்ட் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is jpabipjba-843x1024.jpg

மேலும், திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு முழுவதும் இது குறித்து தான் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.

- Advertisement -

சமந்தா விவாகரத்துக்கு பின்:

பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார். இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதிலும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த புஸ்பா படத்தில் சமந்தா ஆடிய இருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is nrbaga-576x1024.jpg

சமந்தா நடிக்கும் படங்கள்:

இதைத் தொடர்ந்து இவர் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் என்ற பெயரில் உருவாகி வரும் படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். இப்படி சமந்தா பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல மொழி படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். இருந்தாலும் இவர் அப்பப்ப வெளிநாட்டு பயணங்கள் சென்று கொண்டிருக்கின்றார். சமீபத்தில் நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து சுற்றுலா பயணத்திற்கு சென்று இருந்தார்.

-விளம்பரம்-

சமந்தா அணிந்திருக்கும் கெட்ட வார்த்தை டீசர்ட்:

சுற்றுலா பயணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட சமந்தா தான் பயிற்சி காணொளியையும், தனது பனிச்சறுக்கு பயிற்றுவிப்பாளர் கேத்வுடன் இருந்த அனுபவத்தையும், புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார். சமந்தா அவர்கள் மிக மோசமான கெட்ட வார்த்தை பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை அணிந்து வலம் வந்திருக்கிறார். மேலும், இந்த டி -ஷர்ட்டின் விலை மட்டும் 20000 என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஒற்றை டி – ஷர்ட்டின் விலை இவ்வளவா :

அதே போல தன் டி -ஷர்டில் இருக்கும் மோசமாக வாசகத்தை தன் ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுக்கவே இப்படி அணிந்து இருக்கிறார் என்று சிலரும். மேலும், சிலரோ தெலுங்கு சினிமாவில் ஒரு குறிப்பிட்ட நபரை திட்டும் வகையில் தான் சமந்தா இப்படி எல்லாம் சம்பந்தமே இல்லாமல் கேவலமான வார்த்தைகளுடன் கூடிய டீ ஷர்ட்டை அணிந்து இருக்கிறார் என்றெல்லாம் கிளப்பி விட்டு இருக்கின்றனர்.

Advertisement