வெளியானது சமந்தாவின் மிரட்டல் த்ரில்லர் `யூ டர்ன்’ ட்ரெய்லர்!

0
623
Samantha
- Advertisement -

கன்னடத்தில் ஹிட் அடித்த யூ டர்ன் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் ஹிட் அடித்த படம் ‘யூ டர்ன்’. இப்படத்துக்குப் பின்பு நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் மார்க்கெட் உயர்ந்தது.

-விளம்பரம்-

- Advertisement -

த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் அப்போது பேசப்பட்டது. இதைப் பவன் குமார் என்பவர் இயக்கியிருந்தார். இப்போது அதே பவன்குமார் இப்படத்தை தமிழில் ரீ மேக் செய்ய இருக்கிறார். இதில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கேரக்டரில் நடிகை சமந்தா நடிக்கிறார். இதில், பத்திரிகையாளராக நடிக்கிறார் சமந்தா.

அதேபோல் ஈரம் ஆதி, `அஞ்சாதே’ நரேன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை பூமிகாவும் நடித்துள்ளார். பூமிகா நீண்ட நாள்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் படத்தில் நடித்துள்ளார். படத்துக்குக் கன்னடத்தில் இசையமைத்த பூமச்சந்திரா தமிழுக்கும் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலர் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

-விளம்பரம்-
Advertisement