சமையல் மந்திரம் கிரிஜாவா ஞாபகம் இருக்கா? இவருக்கு திருமணம் ஆகி இவ்ளோ பெரிய மகன் இருக்காரா?

0
506
Samayal
- Advertisement -

சினிமாவை விட டிவி நிகழ்ச்சிகள் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் இரவு 10 மணிக்கு மேல் அந்தரங்க டாக்டர்களுடன் இணைந்து பல இளைஞ்சர்களும், கணவன்மார்களும் கேட்கும் அந்தரங்க கேள்விகளை சற்றும் முகம் சுளிக்காமல் கேட்டு அதற்கு டாக்டரிடம் விளக்கத்தை கேட்டு இளசுகள் மத்தியில் பிரபலமானவர் அந்தரங்கம் நிகழ்ச்சி புகழ் கிரிஜா. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாடு இளசுகள் மூலம் பிரபலமானார்.

-விளம்பரம்-

பல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்கள் நண்பன், சமையல் மந்திரம், அந்தரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சியில் டாக்டர்களுடன் அமர்ந்துகொண்டு நேயர்கள் கேட்கும் அந்தரங்க கேள்விகளை டபுள் மீனிங்கில் கலாய்த்து பேசி இளசுகள் மத்தியில் அறியப்பட்டார். ஆனால், நிறைய எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி இவர் பல்வேறு நிகழ்ச்சிகளையும் பண்ணிவிட்டார். இவரது பூர்வீகம் சென்னை தான்.

- Advertisement -

சிறு வயதில் தோல் சம்பந்தமான படிப்பு படிக்கணும்னு ஆசை இவருக்கு இருந்துள்ளது. ஆனால், அது நினைவேறாமல் போக பின்னர் இவர் டிவி ஸ்க்ராலிங்கில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து ஆடிஷன் அட்டண்ட் செய்து பின்னர் தான் சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதன் பின்னர் இவர் மும்பைக்கு சென்று தனது படிப்பையும் தொடர்ந்து உள்ளார்.

இவர் டிவியில் பணியாற்றிய போதே பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், கிளாமர் ரோல் என்பதால் அதனை தவிர்த்துவிட்டாராம். சமீப காலமாக இவர் டிவி நிகழ்ச்சி செய்வதை கூட நிறுத்திவிட்டார். மேலும், இவரை விமர்சித்தவருக்கு பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.அதில் அவர் கூறி இருந்தது, இந்த நிகழ்ச்சி ஒரு மருத்துவ நிகழ்ச்சி என்பதை மனதில் கொண்டு தான் நான் தொகுத்து வழங்கினேன்.

-விளம்பரம்-

அதில் நடக்கும் உரையாடலை பார்த்து என்னை விமர்சனம் செய்ய வேண்டாம். இந்த நிகழ்ச்சியில் இருந்து பல இளைஞர்கள் தவறான பாதையில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள். அதோடு பல பெண்கள் தாய்மை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள் என்பதை சொல்வதில் பெருமையுடன் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு லாக் டவுன் சமயத்தில் இவருக்கு திடீர் திருமணம் நடைபெற்று இருந்தது.

இந்த நிலையில் திருமணமான சில மாதத்தில் கர்ப்பமாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அதே ஆண்டில் இருவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து இருந்தது. அவருக்கு சித்தேஷ் என்று பெயரும் வைத்தனர். சமீபத்தில் தான் தங்கள் மகனின் இரண்டாம் பிறந்தநாளை கொண்டாடி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இவரது மகனின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement