தமிழ் சினிமா உலகில் பரிச்சயமான நடிகை சமீரா ரெட்டி. இவர் பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களில் சமீரா முன்னணி நடிகையாக வலம் வந்தார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தான் நடிகை சமீரா ரெட்டி தமிழ் ரசிகர்களிடையே பரிட்சியமானார். அதனை தொடர்ந்து அசல், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்தார்.

அதற்கு பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை என்றவுடன் பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டிலும் ஒன்று இரண்டு படங்களில் மட்டும் நடித்தார். அங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் நடிகை சமீரா ரெட்டி அவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அதற்கு பிறகு நடிப்புக்கு மொத்தமாகவே முழுக்குப் போட்டு விட்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து கொண்டு வருகிறார்.

Advertisement

மேலும், நடிகை சமீரா ரெட்டி அவர்கள் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வருகிறார். இவருக்கு தற்போது ஹன்ஸ், நைரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். நடிகை சமீரா ரெட்டி அவர்கள் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். இவர் சமீப காலமாக மக்களுக்கு நம்பிக்கை தரும் படியான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

அவருடைய பேச்சும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கின்றனர். நடிகை சமீரா ரெட்டி சினிமாவை விட்டு நீங்கினாலும் சோசியல் மீடியாவில் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம். இந்நிலையில் இவர் தனது முதல் குழந்தை பிறந்த போது உடல் நிலை அதிகரித்து இருந்தது பற்றி சமிபத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

Advertisement

இந்த வீடியோ அதிர்ச்சியையும் அளித்திருந்தது. மேலும், தனது பிறந்த மகனை ஏற்க மறுத்ததாக நடிகை சமீரா ரெட்டி அவர்கள் வீடியோ ஒன்றில் கூறியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் முற்றிலும் என் மகன் இடம் இருந்து பிரிந்து இருந்தேன். அவன் யாரென்று எனக்கு தெரியவில்லை. ஏன் என் கணவரின் கையில் அந்த குழந்தையை கொடுத்துவிட்டு இது எனக்கு பிடிக்கவில்லை.

Advertisement

இதை எடுத்துக் கொண்டு தயவு செய்து சென்று விடுங்கள் என்று நான் கூறினேன். என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது தான். அந்த மாதிரி இப்போது எதுவும் இல்லை. எனக்கு அந்தப் பிரச்சினை முழுவதும் குணமாகி விட்டது. என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. அப்போது நான் கிட்டத்தட்ட ஒரு வாரம் மிகவும் சிரமப்பட்டேன் என்று கூறினார்.

Advertisement