கணவருக்கே தெரியாமல் கர்ப்பமான சாமுராய் பட நடிகை.! ரசிகர்கள் ஷாக்.!

0
615
Samurai

நடிகை அனிதா ஹாசநந்தினி மும்பையில் 1981ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தனது 20 வயதில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘கபி சவுதம் கபி’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பாஞ்சாபி என பல மொழிகளில் 60க்கும் மேற்ப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

தமிழில், 2002ஆம் ஆண்டு ‘வருசமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர், சாமுராய் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். மேலும், ரவி கிருஷ்ணா நடித்த ‘சுக்ரன்’ படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார் அனிதா.

- Advertisement -

எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் குறைந்த பின்னர் டீவி சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் நடிக்க துகாங்கினார் அனிதா. ஹிந்தி பிக் பாஸ் சீசன் 10ல் கலந்து கொண்டார் அனிதா. தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் நாகினி சீரியலின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர், கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டது இணையத்தில் வைரலாக பரவியது. ஆனால், அதன் பின்னர் தான் தெரிந்தது, படப்பிடிப்பிற்காக தான் நடிகை அனிதா இது போன்று போஸ் கொடுத்தார் என்று.

Advertisement