விஜய் மகனை போல சிறு வயதிலேயே இயக்குனராக களமிறங்கி இருக்கும் சமுத்திரகனியின் மகன். வீடியோ இதோ.

0
1621
samuthirakani
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் விஜய்க்கு திவ்யா என்ற மகளும் சஞ்சய் என்ற மகனும் இருக்கிறார். இதில் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு சிறு வயதிலேயே சினிமா மீது அதிகம் ஆர்வம் உடையவர். சஞ்சய்க்கு படம் இயக்குவதில் ஆர்வம் உள்ளதால் அதன் சம்பந்தமான படிப்பை லண்டனில் படித்து வருகிறார். மேலும், இவர் சிரி என்ற குறும்படத்தையும் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் விஜய் மகனை போன்று சமுத்திரகனியின் மகனும் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
இயக்குனர் ஆனார் சமுத்திரகனி மகன் | Dinamalar

பன்முக கலைஞர் சமுத்திரகனி :

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி. 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘உன்னைச் சரணடைந்தேன்’. இது தான் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து ‘புரட்சி கலைஞர்’ விஜய காந்தின் ‘நெறஞ்ச மனசு’, எம்.சசிக்குமாரின் ‘நாடோடிகள் 1 & 2, போராளி’, ‘ஜெயம்’ ரவியின் ‘நிமிர்ந்து நில்’ போன்ற சில படங்களை இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி.

- Advertisement -

சமுத்திரகனியின் மகன் ஹரி

முத்திரக்கனி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘ரைட்டர்’. இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இவருடைய மகன் இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. சமுத்திரகனியின் மகன் ஹரி விக்னேஸ்வரன். இவர் தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி, நடித்து உள்ளார். ‘அறியா திசைகள்’ என்று குறும்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த குறும்படம் 40 நிமிடங்கள் கால அளவைக் கொண்டுள்ளது.

இயக்குனராக மாறிய சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன்!

இயக்குனரான ஹரி விக்னேஸ்வரன் :

மேலும், இக்குறும்படம் குறித்து சமுத்திரகனியின் மகனும், இயக்குனருமான ஹரி விக்னேஸ்வரன் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்பதே இந்த குறும்படத்தின் கதை என்று கூறி இருக்கிறார். மேலும், மிக அற்புதமாகவும், திறமையாகவும் ஹரி விக்னேஸ்வரன் கதையை எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

அறியா திசைகள் குறும்படம் :

அதுமட்டுமில்லாமல் இவருடைய கதைக்கு இசை பக்கபலமாக அமைந்திருக்கிறது. மேலும், அறியா திசைகள் குறும்படம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இதனால் ஹரி விக்னேஸ்வரன் தனது அப்பா சமுத்திரக்கனியை போலவே சினிமா துறையில் சாதிப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும், தற்போது சமுத்திரக்கனி பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

அதில் பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமௌலி அவர்கள் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்'(RRR) என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.

Advertisement