இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வருடத்தில் ஆக்ஸ்ட் மாதம் துவங்கியது. முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் சிம்புதேவன் இயக்க, இயக்குனர் ஷங்கர் தயாரித்து வந்தார். ஆனால், இந்த திரைப்படம் பிரச்சனை காரணமாக பாதியில் நிறுத்தபட்டது.

இந்த படத்தில் சம்பள பிரச்சனை காரணமாக வடிவேலு நடிக்க மறுத்துவிட்டார் என்று குற்றம் சுட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த முன்பு வடிவேலு ‘நேசமணி’ என்ற ஹேஷ் டேக் மூலம் உலகளவில் பிரபலமானார். இதனால் பலரும் வடிவேலுவை பேட்டி எடுக்க சென்றனர்.

Advertisement

அந்த வகையில் சம்பீத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு குறித்தும் ஷங்கர் குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். வடிவேலுவின் இந்த விமர்சனத்திற்கு நடிகரும் இயக்குனருமான மூடர் கூடம் பிரவின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனியும் வடிவேலுவை கண்டித்துள்ளார். இதுபற்றி அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ”அண்ணன் வடிவேலுவின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டனத்துக்கும் உரியது. சிம்புதேவனின் கிரியேட்டிவ், புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்!’’ என்று கண்டித்துள்ளார்.

Advertisement

வடிவேலுவின் இந்த விமர்சனத்திற்கு நடிகரும் இயக்குனருமான மூடர் கூடம் பிரவின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்திருந்தார். அதில் வடிவேலு கோமாவில் இருக்கிறார் என்றும் அவருக்கு இந்த அகந்தை கூடாது என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement