சின்னப் பெண்ணை கர்பமாக்கி விட்டான். ஷாக்கிங் தகவலை வெளியிட்ட சிலம்பாட்டம் பட நடிகை.

By Rajkumar · 21/2/2020

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா கான். சிலம்பாட்டம் படத்திற்கு பிறகு பரத் நடிப்பில் வெளியான ‘தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு' போன்று சில படங்களில் நடித்து உள்ளார். பின்னர் தமிழில் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படியே பாலிவுட் பக்கம் சென்று செட்டிலாகி விட்டார் நடிகை சனா.

சமீபத்தில் கூட இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சனாகான். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் அதிக வாய்ப்புக்கள் தேடி வராததால் சொந்தமாக ஒரு சிறு அழகு சாதன விற்பனை தொழிலை செய்து வருகிறார். நடிகை சனாகான் அவர்கள் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸை காதலித்து வந்தார். ஆனால், சமீபத்தில் தனது காதலருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் இதனால் அவருடன் இருந்து தான் பிரிந்துவிட்டதாகவும் கூறி இருந்தார் சனா கான்.

இதையும் பாருங்க : சூர்யா படத்தை பார்த்து விட்டு இம்ப்ரெஸ் ஆன தளபதி? விஜய் 65 இயக்குனர் இவரா?

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த சனா கான், இந்த உண்மையை கூற நான் அதிக தைரியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். எங்களது உறவை நம்பி பலர் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக நான் அந்த அன்பை உரியவரிடம் இருந்து நான் பெற முடியவில்லை. அவன் ஒரு அசிங்கம் இதை கண்டுபிடிக்க எனக்கு ஓர் ஆண்டுகள் ஆகிவிட்டது.ஏனென்றால் நான் அவனை கண்மூடித்தனமாக நம்பினேன். அவன் ஒரு ஏமாற்று வாதிபிரபலத்திற்காக அனைவரிடமும் இதே வேலையாகத்தான் இருந்து வந்துள்ளாள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தனது முன்னாள் காதலர் குறித்து மீண்டும் ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதில், அவன் ஒரு சிறிய பெண்ணை ஏமாற்றி விட்டு கர்ப்பமாக்கி விட்டான். மேலும், அந்த பெண்ணிடம் பணத்தையும் பெற்றிருக்கிறான். ஒரு ஆசிரியர் இப்படித்தான் தனது மாணவர்களிடம் நடந்து கொள்வாரா? அவனின் பெற்றோர் தற்போது பெருமையாக இருப்பார்களா? இவர்கள் மிகவும் மோசமானவர்கள் அல்லாஹ் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுப்பார் அதை நான் பார்ப்பேன் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் சனாகான்.

behindtalkies AMP · Quick view
View full