சூர்யா படத்தை பார்த்து விட்டு இம்ப்ரெஸ் ஆன தளபதி? விஜய் 65 இயக்குனர் இவரா?

0
8539
vijay 65
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தற்போது நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் ஏப்ரல் 9ம் தேதி திரையரங்கிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த வருட தீபாவளிக்கு விஜய் ஒரு படத்தைக் கொடுக்க முடிவெடுத்துள்ளார். இதனால் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு மாஸ்டர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி,வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் சுதா கொங்கரா பெற்றுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா.

- Advertisement -

இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 2016 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்த இறுதி சுற்று படத்தை இயக்கியவர். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்றும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் தளபதி 65 படத்தை இவர் தான் இயக்கப் போகிறார் என்று ஆணித்தரமாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழில் ஒரு மாஸ் ஹீரோவை இயக்கும் முதல் பெண் இயக்குனராக சுதா கொங்கரா திகழ்கிறார். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டது. இயக்குனர் சுதா தயாரிப்பாளரிடம் கதை சொன்னார்.

அவர் உடனே விஜயிடம் கதை சொல்ல அனுப்பி வைத்தார். விஜய்க்கு கதை பிடித்ததால் உடனே ஓகே சொல்லவில்லை. நான் முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தைப் பார்த்து விட்டுத் தான் உறுதிசெய்தேன். அதேபோல் நீங்கள் இயக்கிய சூரரைப்போற்று படத்தை நான் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். உடனே விஜய்யிடம் படம் காண்பிக்கப்பட்டது. படம் பார்த்து விஜய் புன்னகை முகத்துடன் ஓகே என்று சொல்லிவிட்டார். சன் பிக்சர்ஸ் படத்தில் நாம ரெண்டு பேரும் சேர்ந்து வொர்க் பண்ணலாம் என்று சந்தோஷமாக கூறியிருந்தார். சூரரைப்போற்று படத்தில் இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் தான் தளபதி 65 படத்தில் இசையமைப்பாளராக இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய், சுதா, ஜிவி பிரகாஷ் ஆகிய மூவரையும் தளபதி 65 படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் செய்து வைத்து உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement