அவன் ஒரு அசிங்கம். பல்வேறு பெண்களுடன் தொடர்பு. புலம்பி தள்ளி. காதலை முறித்துக்கொண்டு சனா கான்.

0
1907
sana-khan
- Advertisement -

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா கான். சிலம்பாட்டம் படத்திற்கு பிறகு பரத் நடிப்பில் வெளியான ‘தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு’ போன்று சில படங்களில் நடித்து உள்ளார். பின்னர் தமிழில் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படியே பாலிவுட் பக்கம் சென்று செட்டிலாகி விட்டார் நடிகை சனா.

-விளம்பரம்-
Image result for sana khan boyfriend

- Advertisement -

சமீபத்தில் கூட இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சனாகான். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் அதிக வாய்ப்புக்கள் தேடி வராததால் சொந்தமாக ஒரு சிறு சோப்பு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சனாகான் அவர்கள் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அதற்கு பதிலளிக்காமல் இருவரும் மவுனம் காத்து வந்தார்கள். பின் நடிகை சனாகான் அவர்கள் மெர்வின் லூயிஸின் பிறந்தநாளன்று அவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய காதலை உறுதி செய்து இருந்தார்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்த இவர்கள் அடிக்கடி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்கள். இந்த நிலையில் நடிகை சனாகான் தனது காதலர் உடனான காதலை முறித்துக் கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இந்த உண்மையை கூற நான் அதிக தைரியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். எங்களது உறவை நம்பி பலர் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக நான் அந்த அன்பை உரியவரிடம் இருந்து நான் பெற முடியவில்லை. அவன் ஒரு அசிங்கம் இதை கண்டுபிடிக்க எனக்கு ஓர் ஆண்டுகள் ஆகிவிட்டது.ஏனென்றால் நான் அவனை கண்மூடித்தனமாக நம்பினேன். அவன் ஒரு ஏமாற்று வாதிபிரபலத்திற்காக அனைவரிடமும் இதே வேலையாகத்தான் இருந்து வந்துள்ளான்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B8dL_GXg-tB/

நான் கூறுவது ஒன்றும் ஜோடிக்கப்பட்ட விஷயம் கிடையாது. அவனுக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. ஆனா,ல் அதை நான் பின்னர்தான் கண்டுபிடித்தேன், அதிலும் குறிப்பாக ஒரு பெண்ணுடன் அவன் தொடர்பில் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளித்தது. அவள் யார் என்பதும் எனக்கு தெரியும். உனக்கு இது அசிங்கமாக தெரியவில்லையா கண்டிப்பாக அவன் உன்னை ஏமாற்றுவதற்கு முன்பாக உன்னுடைய பெயரை கண்டிப்பாக நான் இந்த உலகத்திற்கு சொல்வேன். அவன் என்னை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டான். ஆனால், என்னுடைய மகனுக்கோ அல்லது மகளுக்கோ அவன் என்ன கற்றுக் கொடுத்திருக்க போகிறான் என்று பதிவிட்டுள்ளார் சனாகான்.

Advertisement