வர வர, நீங்க பண்றது எல்லாம் Cringeஆ இருக்கு – சனம் ஷெட்டியை கழுவி ஊற்றும் ரசிகர்கள் ​​

0
373
- Advertisement -

தன்னுடைய முன்னாள் காதலனை நினைத்து சனம் ஷெட்டி வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 4’ மூலம் பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவர் பிக் பாஸுக்கு முன்பாக பல படங்களில் நடித்து இருந்தாலும் இவருடைய பெயர் பிரபலமானது என்னவோ ‘பிக் பாஸ் சீசன் 3’ல் தர்ஷன் கலந்துகொண்ட போது தான்.

-விளம்பரம்-

இவர் மாடல் அழகியும் ஆவார். ஆரம்பத்தில் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த சனம் ஷெட்டி ‘அம்புலி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் கதம் கதம், சிங்கம் போன்ற சில படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.

- Advertisement -

சனம் ஷெட்டி குறித்த தகவல்:

பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். தர்சன் காதலித்த விஷயத்தை கூட சனம் அப்போது சொல்லவில்லை. இப்படி ஒரு நிலையில் சில வருடங்களுக்கு முன், ‘கடந்த பிப்ரவரி மாதம் நடிகை சனம் ஷெட்டி, தனக்கும் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம்’ முடிந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்து இருந்தார். அதோடு நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் சனம் ஷெட்டி.

தர்ஷன்- சனம் ஷெட்டி காதல்:

இதை அடுத்து பேட்டியில் சனம், தர்ஷனுக்கும் தனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சில பிரச்சினைகள் இருந்தது. ஆனால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் தான் தன்னை சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு தர்ஷன், சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான் ஆனால், அவருடைய நடவடிக்கை சரியில்லாததால் அவர் மீது இருந்த நம்பிக்கையும் காதலும் போய்விட்டது.

-விளம்பரம்-

தர்ஷன்- சனம் ஷெட்டி பஞ்சாயத்து:

இதனால் அவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தார். அதன் பின் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்கம் தொடரப்பட்டது. பின் இருவரும் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி இருந்தார்கள். அதற்கு பின் தர்ஷன்- சனம் ஷெட்டி பஞ்சாயத்து என்ன ஆனது என்று தெரியவில்லை. இருந்தாலுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஏதாவது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

சனம் ஷெட்டி பதிவு:

அதுவும் சமீப காலமாக இவர் கிளாமரான புகைப்படம் வீடியோக்களை தான் பகிர்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய முன்னாள் காதலன் தர்சனை திட்டி சனம் செட்டி போட்டிருக்கும் ரிலீஸ் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதை பார்த்த பலரும், இவர் தர்ஷனை தான் திட்டி இப்படி எல்லாம் செய்கிறார் என்றெல்லாம் சனம் ஷெட்டியை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Advertisement