பிரஜனுக்கு ப்ரோமோஷன் .! காதலர் தினத்திற்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் சான்றா.!

By Rajkumar · 10/2/2019

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடிக்கும் பிரஜனின் மனைவி ஆவார். 

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாண்ட்ரா தனது பயணத்தை மலையாள படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்து துவங்கினார். மேலும் , தமிழில் 2000 ஆண்டு விஜய் , “கண்ணுக்குள் நிலவு ” என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 

சென்ற ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிவி பக்கம் வந்தார் இவரது கணவரான பிரஜின். விஜய் டிவி  சீரியல் ஹீரோவாக அவர் ரீ எண்ட்ரி தந்த ‘சின்னத்தம்பி’ தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட சீரியல்களில் சின்னத்தம்பியும் ஒன்று. இது பிரஜினுக்கு நிறைய விருதுகளைப் பெற்றுத் தந்தது இந்த தொடர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சான்றா,
வரப்போற பிப்ரவரி 14 எங்களுக்கு மிக மிக முக்கியமான, அதாவது ஸ்பெஷலான லவ்வர்ஸ் டே சார். அந்த நாளில் எங்க ரெண்டு பேரின் ரசிகர்களுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி தரப்போறோம். எங்க வாழ்வின் மிக முக்கியமான தருணம் அது என்று கூறியுள்ளார். வேறு ஒன்றும் இல்லை தற்போது சான்றா கர்ப்பமாக உள்ளாராம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full