திருமணத்திற்கு பின் கணவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் – சங்கீதா போட்ட உருக்கமான பதிவு.

0
218
- Advertisement -

திருமணம் ஆகி தன் காதல் மனைவியுடன் நடிகர் ரெடின் கிங்ஸ்லி பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் 1998ல் நடன கலைனராக அறிமுகமானார். அதன் பின் நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் படத்திலும் கிங்ஸ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார்.
மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படத்தின் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம். டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ரெடின் கிங்ஸ்லி திரைப்பயணம்:

கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் செய்து தந்திருந்தது. இதை அடுத்து ரெடின் கிங்ஸ்லி பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இவர் மாஸ்டர் பட நடிகையை திடீர் திருமணம் முடித்துள்ளார்.

சங்கீதா திரைப்பயணம்:

அவர் வேற யாரும் இல்லை சங்கீதா தான். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் தான் சங்கீதா. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராகவும் ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கதாபத்திரத்தில் நடித்தவர் சங்கீதா. இந்த படத்தில் இவர் சில நிமிடம் நடித்தாலும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் இந்த டாக்டர்.இவர் மாஸ்டர் படத்தில் மட்டுமல்லாது கார்த்தியின் சுல்தான் திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா திருமணம்:

தற்போது இவர் சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் இவர்கள் திருமணம் மைசூரில் உள்ள ஒரு படப்பிடிப்பில் நடந்தது. இந்த திடீர் திருமணத்தில் படகுழுவினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் பலரும் இது ஷூட்டிங் கல்யாணம் தான் நினைத்தனர். பின் சங்கீதாவிற்கு மேக்கப் போட்ட பெண் ஒரு பேட்டியில், இருவரும் பிளான் செய்து திருமணத்தை செய்யவில்லை. அவருக்கு மைசூரில் படப்பிடிப்பு நடந்ததால் அந்த இடைவேளையில் தான் திருமணம் நடந்தது என்று கூறினார்.

ரெடின் கிங்ஸ்லி பிறந்தநாள்:

ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்தவர், சங்கீதா இந்து என்பதால் இரு முறைப்படி திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நடிகர் ரெடின் கிங்ஸ்லி பிறந்தநாள். திருமணம் ஆகி வரும் முதல் பிறந்தநாள். இந்த பிறந்த நாளை ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய மனைவியுடன் கொண்டாடியிருக்கிறார். மேலும், ரெடின் கிங்ஸ்லி பிறந்தநாளுக்கு அவர் மனைவி சங்கீதா, இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார். ரசிகர்கள் பலரும் ரெடின் கிங்ஸ்லிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement