சினிமாவைப்பொறுத்தவரை எத்தனையோ விளையாட்டு வீரர்கள் நடிகர்களாக களம் இறங்கியிருக்கிறார்கள் தமிழில் சடகோபன் ரமேஷ் ஹர்பஜன்சிங் இர்பான் பதான் போன்ற பலர் கிரிக்கெட்டுக்கு பின்னர் நடிகர்களாக வலம் இறங்கினார்கள் இப்படி ஒரு நிலையில் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா நடிகையாக களமிறங்கியிருக்கிறார். இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கடந்த 1986ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.

தனது ஆறு வயதிலேயே டென்னிஸ் விளையாட்டை பயின்ற சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டில் பல கோப்பைகளை வென்று இருக்கிறார். இந்தியாவின் டென்னில் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து நடைப்பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று.

Advertisement

கடந்த 2018 ஆண்டு ஏப்ரல் மாதம்  சானியா மிர்சா தான் கர்ப்பமாக இருப்பதாக கடவுளுக்கு நன்றி கூறி பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் கடந்த அக்டொபர் 2018 ஆம் ஆண்டு 31 வயதான சானியா மிர்சாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. சானியா-மாலிக் தம்பதி தங்களது குழந்தைக்கு, இஜான் மிர்சா மாலிக் என்று பெயர் சூட்டினர். குழந்தை பேரு காரணத்தினால் சானியா மிர்சா உடல் எடை கூடி படு குண்டாக மாறி இருந்தார். தற்போது சானியா மிர்சா,  ‘எம்டிவி நிஷேத் அலோன் டுகதர்’ என்ற வெப் தொடரில் நடிகையாக களமிறங்கி இருக்கிறார்.

இதில் நடிப்பது குறித்து சானியா மிர்சா கூறும்போது, “காசநோய் நமது நாட்டில் தீராத வியாதியாக உள்ளது. இந்த நோயில் சிக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் குறைவானவர்களாக உள்ளனர். கொரோனா காலத்தில் நோய் பாதிப்பு இன்னும் அதிகமாக உள்ளது. இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை எம்டிவி நிஷேத் அலோன் டுகதர் தொடர் அழுத்தமாக பதிவு செய்யும். நான் இந்த தொடரில் பங்கேற்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement