சின்னத்திரை தளபதி சஞ்சீவ் நடிக்கும் புதிய சீரியல் – ஜோடி யார் தெரியுமா? வெளியான ப்ரோமோ

0
181
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியல் குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை மக்களின் திகழ்கின்றது. இதனால் வித்தியாசமான கதைகளத்துடன் புதுப்புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கிறது. சொல்லப்போனால், தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சன் டிவி இருக்கிறது. மேலும், டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருப்பதற்காகவே அடிக்கடி புது புது சீரியல்களை சன் டிவி வெளியிட்டு வருகிறார்கள். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல், கயல், சுந்தரி, இனியா, வானத்தைப்போல போன்ற பல தொடர்கள் விறுவிறுப்பாக ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தையும் பிடித்து இருக்கிறது.

- Advertisement -

லட்சுமி சீரியல்:

தற்போது பல சேனல்களில் சீரியல்கள் புதுசு புதுசு வந்தாலும் சன் டிவிக்கு என்றே ஒரு தனி மவுஸ் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியல் குறித்த அப்டேட் தான் வெளியாகியிருக்கிறது. அதாவது, லட்சுமி என்ற சீரியல் தான் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் சஞ்சீவ் கதாநாயகனாகவும், ஸ்ருதி ஹீரோயினியாகவும் நடிக்கின்றார்கள்.

சீரியல் கதை:

சீரியலில் ஸ்ருதி அவர்கள் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் தன்னுடைய இரண்டு தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து தன்னுடைய மொத்த சம்பளத்தையும் தன்னுடைய குடும்பத்திற்கு கொடுக்கும் ஒப்பந்தத்தை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அந்த வீட்டிற்கு மருமகளாக செல்வேன் என்று கூறுகிறார்.

-விளம்பரம்-

வைரலாகும் வீடியோ:

இன்னொரு பக்கம் சஞ்சீவியின் அம்மா, வரப்போகும் மருமகள் நிறைய நகையையும், மாதம் ஒன்னாம் தேதி வந்தால் மொத்த சம்பளத்தையும் என் கையில் கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். இப்படி மருமகள்- மாமியார் இடையே நடக்கும் கதை தான் தற்போது ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது இந்த சீரியலுடைய ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது

Advertisement