கறி கொழம்புல எலும்பு.! உன் கதையே வேணாம் கிளம்பு.! சந்தானத்தின் A1 டீஸர்.!

0
1556
santhanam
- Advertisement -

காமெடியனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதாரமெடுத்த சந்தானம் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் நல்ல வெற்றியை அளித்தது. சந்தானம் இறுதியாக நடித்த ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து சந்தானம் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இந்தப் படத்துக்குப் பிறகு, சந்தானம் நடித்து வரும் ‘A 1’ படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. சந்தானத்தின் நண்பரான ராஜ் நாராயணன் சர்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். 

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் சங்கீதா.? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.! 

- Advertisement -

நாளைய இயக்குநர் நான்காவது சீசனின் டைட்டில் வின்னரான ஜான்சன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர் ‘கோலமாவு கோகிலா’ ரெடின், டைகர் கார்டன் தங்கதுரை, ஆதி படத்தில் வில்லனாக நடித்த சாய்குமார் குமார், சிவராமன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

சர்வர் சுந்தரம் படத்துக்கு பிறகு சந்தானம் நடிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம் நடிப்பில் `சர்வர் சுந்தரம்’, `மன்னவன் வந்தானடி’, `ஓடி ஓடி உழைக்கணும்’ ஆகிய படங்கள் திரைக்கு வரத் தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement