நண்பருக்காக மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்.! யார் படத்தில் தெரியுமா.!

0
1026
- Advertisement -

காமெடியனாக திரையுலகில் காமடியனாக கால் பதித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இந்நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’,  ’மன்னவன் வந்தானடி’, ’ஓடி ஓடி உழைக்கணும்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. 

-விளம்பரம்-

சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடியனாக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு வந்தாலும் இவரை மீண்டும் காமெடியனாக பார்க்க ரசிகர்கள் விரும்புகின்றனர்.

- Advertisement -

ஆனால், சந்தானமோ இப்போதைக்கு அடுத்த கட்டத்திற்கு வந்து விட்டேன் இனி ஹீரோவாக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்வேன் என்று முன்பே கூறியிருந்தார். இதனால் சந்தானத்தை முழு நேர காமெடி நடிகராக பார்க்க முடியாது என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

Related image

இந்த நிலையில் சிம்பு புதிய படத்தில் நடிகர் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்தானத்தை சிம்பு தான் காமெடியனாக அறிமுகம் செய்து வைத்தார் அந்த நன்றிக்காக சந்தானம் மீண்டும் காமெடியான களமிறங்க உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement