லொள்ளு சபாவில் இருந்த போது லோக்கல் சேனலில் Vjவாக பணியாற்றியுள்ள சந்தானம். அறிய வீடியோ.

0
971
santhanam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்கு நுழைந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். பின்னர் நடிகை ராதிகா இயக்கிய அண்ணாமலை என்ற தொடரிலும் நடிகர் சந்தானம் நடித்து இருந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சந்தானம் பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

சினிமாவில் நடிக்க வரும் முன்பு நடிகர் சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்தவர் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான் ஆனால் நடிகர் சந்தானம் லொள்ளு சபாவில் இருந்தபோதே ஒரு லோக்கல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார் ஆம் ரைட் என்ற தொலைக்காட்சியில் நடிகர் சந்தானம் நேயர்களுடன் பேசும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து இருக்கிறார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

அந்த வீடியோவில் சந்தானத்திற்கு கால் செய்யும் ஒரு ரசிகர் நீங்கள் சூர்யா போல அழகாக இருக்கிறீர்கள் நீங்களே ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறுகிறார். அதற்கு சந்தானம் ஏன் நான் நன்றாக இருக்கிறது உங்களுக்கு பிடிக்கவில்லையா. நான் எல்லாம் எப்படி ஹீரோவாக நடிக்க முடியும் என்று கேலியாக கூறியிருந்தார. ஆனால், அன்று கேலியாக கூறிய சந்தானம் என்று தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதை கடின உழைப்பு என்று கூறுவதை விட வேறு எந்த வார்த்தையும் பொருத்தமாக இருக்காது.

-விளம்பரம்-
Advertisement