சாந்தனுவின் புதிய படத்தின் டைட்டிலை கேட்டு மெசேஜ் செய்த விஜய்.! ஏன் தெரியுமா.!

By ·

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் தான் பல இளம் நடிகர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்றே கூறலாம். பொது ரசிகர்களை தாண்டி பல்வேறு நடிகர், நடிகைகளும் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகின்றனர்.

https://twitter.com/imKBRshanthnu/status/1122371451913244672

அந்த வகையில் நடிகர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சந்தானு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல் விஜய் குடும்பமும் பாக்கியராஜ் குடும்பமும் நீண்ட வருடங்களாக நெருங்கிய நட்பில் இருந்து வந்தனர். சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் பாக்யராஜ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தந்தார்.

ஆனால், சந்தனுவோ, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” ! என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான். என்று ட்விட்டரில் பதிவிட்டு விஜய் ரசிகர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

இந்த நிலையில் சாந்தனு புதிய படத்திற்கு இராவணகோட்டம் என்று தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்திற்காக சாந்தனுவிற்கு , விஜய் தொலைபேசி மூலம் மெசேஜ் செய்து “வாழ்த்துக்கள் நண்பா, டைட்டில் செம்ம” என்று கூறினாராம். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full