விமான பணிப்பெண்ணிடம் நடிகை சாரா அலிகான் கோபப்பட்டு இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விமானத்தில் நடிகை சாரா அலிகான் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய இருக்கைக்கு விமான பணிப்பெண் ஒருவர் வந்து இருக்கிறார். அப்போது தவறுதலாக சாரா அலிகான் உடையில் விமான பணிப்பெண் ஜூசை கொட்டியிருக்கிறார்.
View this post on Instagram
இதனால் ஆத்திரமடைந்த சாரா அவர்கள் விலை உயர்ந்த துணியின் மேல் ஜூஸ் கொட்டி விட்டாயே என்று கோபப்படும் அளவிற்கு அந்த பணிப்பெண்ணை முறைத்தார். பின் அவர் அங்கிருந்து கழிவறைக்கு செல்லும் போது அந்த பணிப்பெண்ணை முறைத்தபடியே அங்கு இருந்து சென்றிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை தான் #SaraOutfitSpill என்ற ஹாஸ்டேக் போட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சாரா அலிகான் வீடியோ:
இதை பார்த்த பலர், இது விளம்பரம் அல்லது திரைப்படத்திற்கான காட்சியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், சிலர் இது உண்மையிலேயே நடந்ததா? என்று தெரியவில்லை என்றும், சாரா செயலை கண்டித்தும் வருகிறார்கள். பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் சாரா அலி கான். இவர் பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தில் பிறந்தவர்.

சாரா அலிகான் குறித்த தகவல்:
இவர் அமிர்தா சிங் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரின் மகள் ஆவார். பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமாக இருப்பவர் சயீப் அலிகான். இவரின் முதல் மனைவியின் மகள் தான் சாரா அலி கான். கடந்த சில வருடங்களுக்கு முன் அலி தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்துவிட்டார். அதன் பின்னர் பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூரை பல வருடங்களாக காதலித்து வந்தார் .
சாரா திரைப்பயணம்:
அதன் பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இருந்தாலும்,சைஃப் அலிகான் தனது முதல் மனைவிக்கு பிறந்த மகளான சாராவை கவனித்து கொள்கிறார். சாரா அலி கான் படித்த பிறகு 2018 ஆம் ஆண்டில் 'கேதார்நாத்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

சாரா நடிக்கும் படங்கள்:
கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘அத்ரங்கி ரே ‘ என்ற படத்தில் சாரா அலி கான் நடித்து இருந்தார்.
அதற்குப் பின் இவர் காஸ்லைட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளியாகி இருந்த ஏ வதன் மேரே வதன் படத்தில் இவருடைய நடிப்பு அனைவரிடமும் பாராட்டை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் மெட்ரோ இன் டினோ, ஸ்கை போர்ஸ், ஈகிள் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.






