அம்மா என்ற கதாபாத்திரம் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சரண்யா பொன்வண்ணன் தான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் படங்களில் குணசித்திர வேடங்களிலும், பெரும்பாலும் நாயகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்திலும் தான் நடித்து உள்ளார். இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும், இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

Advertisement

இந்நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் தவமாய் தவமிருந்து படம் குறித்தும், இயக்குனர் சேரன் குறித்தும் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியது, நான் தவமாய் தவமிருந்து படத்தில் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன். அது என்ன கிராமம் என்று கூட தெரியாது. என்னுடைய படங்களில் முதன் முதலாக நான் நடித்த கிராமத்து கதாபாத்திரம் என்றால் அந்த படம் தான். கிராமத்து கதாபாத்திரங்களில் நான் சிறப்பாக நடிக்கிறேன் என்றால் அதற்கான முழு கிரெடிட்டும் சேரன் சாருக்கு தான் போகும்.

இதையும் பாருங்க : விதவிதமான படு கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கொலைகாரன் பட நடிகை.

Advertisement

இந்த படத்திற்கு முன்பு நான் கிராமப்புற கதாபாத்திரங்கள் குறித்து எல்லாம் பெரிய அளவில் ஒன்றும் தெரியாது. அந்த படத்தின் போது தான் நான் எல்லாமே கற்றுக்கொண்டேன். ஒரு கிராமத்து அம்மாவாக அந்த படத்தில் நான் நடித்து இருந்தேன். அப்போது கிராமப்புறங்களில் இருப்பவர்கள் எல்லாம் நெயில் பாலிஷ் போட மாட்டார்கள் என்பது கூட எனக்கு தெரியாது. அந்த அளவிற்கு கிராமம் புறங்களில் இருக்கும் அவர்களின் கதாபாத்திரம் தெரியாத அளவிற்கு அந்த படத்தில் நடிக்க தொடங்கினேன். முதலில் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரமும், நான் எப்படி இருக்க வேண்டும் என்று சேரன் செல்லும் போது என்னையா இதெல்லாம் என்று கோபமாக வந்தது. ஒரு உண்மையாக அந்த கதாபாத்திரம் கன கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதை நான் அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன்.

Advertisement

இந்த படம் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படம். அப்போது என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறு வயது என்பதால் அவர்களை விட்டு வெளியே நீண்ட நாட்கள் தங்கி நடித்த படம். இந்த படத்திற்காக குழந்தைகளை பிரிந்து கஷ்டப்பட வேண்டுமா? என்றெல்லாம் யோசித்தேன். என்னால் சூட்டிங்கில் இருந்தும் வரமுடியாது. அனைத்து காட்சிகளிலும் நான் இருப்பேன். அவர்களாலும் என்னை விட முடியாது என்றாலும் 5 நாளில் வீட்டுக்கு போய் விடுவேன் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் என் இரண்டாவது குழந்தைக்கு ஒன்றரை வயது என்பதால் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன்.

வீடியோவில் 5:04 நிமிடத்தில் பார்க்கவும்

நான் வீட்டிற்கு சென்றிருந்த போது என் சின்ன குழந்தைக்கு கை கிழிந்து ஃபுல் ஸ்டிச் போட்டிருந்தார்கள். அதையெல்லாம் சூட்டிங்கில் இருக்கிறேன் என்பதால் என் கணவர் என்னிடம் சொல்லவில்லை. நான் வீட்டிற்கு வந்ததை பார்த்த பின்பு தான் என்னுடைய நெஞ்சே பதறவைத்தது. தவமாய் தவமிருந்து படம் தான் எனக்கு ஒரு அடிநாதம் போன்றது. அதன் பின் நான் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களில் வெற்றி பெற்றது என்றால் அதற்கு முழுக்க முழுக்க தவமாய் தவமிருந்து படம் தான் என்று கூறினார்.

Advertisement