இப்ப இருக்கிற வசதிகள் மட்டும் அப்போ இருந்திருந்தால் நான் முதல்வராகி இருப்பேன் என்று சரத்குமார் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னனி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சரத்குமார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடிபில்டர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் படங்களில் வில்லன் வேடத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக கலக்கி இருக்கிறார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். மேலும், இவர் அந்தக் காலத்திலேயே உடற்பயிற்சிகளை ஒழுங்கான முறையில் மேற்கொண்டு உடல் கட்டுக்கோப்புடனும், உடல் ஒருங்கிணைப்பாகவும் வைத்திருந்தவர்.

Advertisement

சரத்குமார் திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் சரத்க்குமார் 20 வயதிலே மிஸ்டர் மெட்ராஸ்(சென்னை ஆணழகன் ) என்ற போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தையும் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சரத்குமார் கட்சி செய்த நலத்திட்ட உதவிகள்:

இதனைத் தொடர்ந்து சரத்குமார் அவர்கள் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் நடிகர் என்பதை தாண்டி அரசியல்வாதியும் ஆவார். அகில இந்திய சமத்துவ கட்சியை இவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கட்சியின் சார்பில் சென்னை திருவொற்றியூரில் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளும் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருக்கிறார்கள்.

Advertisement

சரத்குமார் அளித்த பேட்டி:

இதில் அந்த கட்சியின் நிர்வாகிகள், சரத்குமார் கலந்து கொண்டு இருந்தார்கள். மேலும், பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகளை சரத்குமார் வழங்கி இருக்கிறார். பின் நிகழ்ச்சியில் சரத்குமார் கூறியிருப்பது, சமத்துவ மக்கள் கட்சியினர் அரசியல் மட்டுமில்லாது ஆன்மீகம், சமத்துவம் என அனைத்துமே பேசக்கூடியவர்களாக தான் இருப்பார்கள். தொண்டர்கள் மக்களுக்காக உழைத்தால் தலைவன் முதல்வர் ஆகலாம், பிரதமர் ஆகலாம். எந்த ஒரு பண பலமும் இல்லாமல் பொருள் உதவி இல்லாமல் 15 ஆண்டுகள் இந்த கட்சி இயங்கி வருகிறது என்பது ஒரு பெரிய சாதனை.

Advertisement

அரசியல் குறித்து சொன்னது:

அரசியல் என்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமில்லை. சேவை செய்வதற்கும் தான். நாங்கள் தொண்டு, சேவை, உதவி செய்து கொண்டிருந்த காலங்களில் செல்போன் வீடியோ, கேமரா போன்றவை எல்லாம் இல்லை. இதெல்லாம் இருந்திருந்தால் அன்றைக்கு நாங்கள் தான் முதலமைச்சர் ஆகியிருப்போம். தேர்தலை பற்றி சிந்திப்பதை விட அடுத்த தலைமுறை பற்றி சிந்திப்பவன் தான் தலைவன். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் கிடைக்கும் என அறிவித்தவன் நான். தீபாவளியை மக்களோடு கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement