ஹீரோவா நடிக்க போகிறார் சரவணா ஸ்டோர் ஓனர், அவருக்கு ஜோடி யார் தெரியுமா

By Ashok · 22/1/2018
கடந்த சில வருடங்களாக சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் விளம்பரம் மற்றும் மீடியாக்களின் கண்களில் அதிகம் தென்படுகிறார். தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடித்து அசத்தினார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை காலாய்த்து தள்ளினாலும், அவர் அசராமல் ஹன்சிகாவுடன் விளம்பரத்தில் நடித்து 'பெஸ்ட்டு பெஸ்ட்டு' என தன் கடையை பிரோமோட் செய்து வருகிறார். இதன் உச்சகட்டமாக , கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு இவரும் அழைக்கப்பட்டிருந்தர். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பக்கத்தில் அமர்ந்தவாறு போட்டோக்கள் பரவியது. விஷயம் என்னவென்றால், அந்த கலைநிகழ்ச்சிக்கு 2 கோடி ரூபாய் ஸ்பான்சர் செய்துள்ளார் அருள். அடுத்தகட்டமாக படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் அருள். துணை இயக்குனர் ஒருவர் அவரை அணுகி ஒரு கதையை கூறியுள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஹீரோயினாக நயன்தாராவை பேசலாம் என உள்ளார்களாம். இதனை கேட்ட நெட்டிசன்கள் மீண்டும் அருளை கலாய்க்க துவங்கியுள்ளனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full