அப்படி தாண்டா பேசுவேன்.! சேரனை கொச்சை படுத்தி பேசிய சரவணன்.!

0
3201
saravanan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு லக்ஸரி பட்ஜெட்டிற்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் நேற்றைய டாஸ்கில் போட்டியாளர்களுக்கு மொட்டை கடுதாசி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த டாஸ்கின் போது கவினுக்கும் சாக்க்ஷிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதே போல கவினுடன் ஒப்பிட்டு பேசியதால் லாஸ்லியாவும் சாக்க்ஷி மீது கோபம் கொண்ட லாஸ்லியா, சாக்க்ஷியிடம் கொஞ்சம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டது பலருக்கும் வியப்பாகவே இருந்தது.

இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் இந்த வாரம் டாஸ்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள், யார் மோசமாக செயல்பட்டார்கள் என்று போட்டியாளர்கள் கருத்து தெரிவித்த போது சேரன், சரவணின் பெயரை மோசமாக டாஸ்க் செய்தார் என்று கூறிவிட கடுப்பான சரவணன், சேரனை மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement