ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு நாளைக்கு இத்தன பாக்கெட் சிகரெட் பிடிப்பார் – சரவணன் மீனாட்சி இர்பான் உருக்கம்.

0
1897
irfan
- Advertisement -

கடந்த மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் காலமான சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-
Actor Venkatesh death

அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.இந்த சீரியலில் கண்ணம்மாவாக ரோஷிணியும், பாரதியாக அருண் பிரசாத்தும் நடித்து வந்தனர். மேலும், இந்த சீரியலில் பாரதியின் தந்தையாக நடிகர் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல சீரியல் நடிகர் வெங்கட் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாறப்படைப்பு ஏற்பட்டு காலமாகி இருந்தார்.

- Advertisement -

நடிகர் வெங்கட், செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.அதன் பின்னர் பல்வேறு சீரியல்களில் நடித்த இவர் பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் குறிப்பாக பீட்சா, சூதுகவ்வும், தெகிடி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக மைனா படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் கவனிக்கப்பட்டது. செல்லமடி நீ எனக்கு சீரியலை தொடர்ந்து உறவுகள், சங்கமம், சரவணன் மீனாட்சி, ஈரமான ரோஜாவே போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.

Saravanan Meenatchi Serila Actor Irfan

இப்படி ஒரு நிலையில் வெங்கடேஷின் மறைவு குறித்து சரவணன் மீனாட்சி சீரியலில் அவருடன் நடித்த சீரியல் நடிகர் இர்பான் கூறியிருப்பதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஒரு நாளைக்கு 3 பாக்கெட் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார் நான் அவரிடம் சிகரெட்டை குறைகள் என்று சொல்லி இருக்கிறேன் அவர் அதை கேட்கவில்லை என்றே நினைக்கிறேன் சிகரெட்டை கொஞ்சமாவது அவர் குறைத்திருக்கலாம் என்று கூறியள்ளார்.

-விளம்பரம்-
Advertisement