தளபதி ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம் – சர்கார் பட முக்கிய அறிவிப்பை அறிவித்த Sun Pictures.!

0
518
Sarkar

Sarkarஅப்டேட்டை நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கடந்த ஜூன் 22 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட பிறகு பின்பு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி ‘சர்கார்’ படத்தின் இசை வெளியிட்டு தேதியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும், தற்போது விஜய் ரசிகர்களுக்கு அடுத்து ஒரு சிறப்பான அப்டேட்டை அளித்திக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதாவது அடுத்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ‘சர்கார்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற உள்ளது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி நிலையில் அதற்கு முன்பாக நாளை (செப்டம்பர் 19) “சர்கார்” படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக சன் பிசர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

Murugadoss

இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி வரும் செப்டெம்பர் 25 ஆம் தேதி ஏ ஆர் முருகதாசின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி “சர்கார்” படத்தின் சிங்கள் டிராக் வெளியாக இருப்பதாக நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பை தான் நாளை காலை 11 மணிக்கு சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement