சர்க்கார் படத்தை கிண்டல் செய்து போஸ்டர் வெளியிட்ட தமிழ் படம் 2 குழு.! புகைப்படம் உள்ளே

0
1461
Sarkar
- Advertisement -

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள “தமிழ் படம் 2” படத்திற்க்காக தான் ரசிகர்கள் அணைவரும் வெய்டிங். இதற்கு முக்கியகாரணம் சமீப காலமாக வெளியாகி வரும் இந்த படத்தின் போஸ்டர்களும், டீசரும் தான்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் துவங்கி ஹாலிவுட் வரை உள்ள அணைத்து படங்களையும் கலாய்த்து இந்த படக்குழு வெளியிட்டு வரும் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் இருக்கிறது. இதுவரை தமிழில் ஏற்கனவே வெளியான படங்களை தான் இவர்கள் கலாய்த்து வந்தனர்.

- Advertisement -

தற்போது விஜய் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும்’சர்கார் ‘ படத்தின் போஸ்டர் ஒன்றையும் இவர்கள் கலாய்த்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் சிவா, கோட் ஷூட் அணிந்து கொண்டு மடியில் லேப் டாப் வைத்தபடி ரிக்ஷா வண்டியில் பயணம் செய்து கொண்டுருக்கிறார்.

இவர்கள் செய்யும் சேட்டைக்கு ஒரு அளவே இல்லையா என்று ரசிகர்கள் அனைவரும் சிரித்து வருகின்றனர். அதே போல இவர்கள் பாரபட்சம் பார்க்காமல் அணைத்து ஹீரோக்களையும் கலாய்ப்பதால் ரசிகர்களும் இவர்கள் செய்து வரும் சேட்டைகளை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement