“சிம்ட்டங்காரன்” பாடலுக்கு த்ரிஷா என்ன சொன்னாங்க தெரியுமா..? டிரெண்ட் ஆகும் டிவிட்

0
276
Trisha

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்தின் சிங்கள் டிராக் பாடல் நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து “சிம்ட்டாங்கரன்” என்ற ஒரு பாடலை மட்டும் நேற்று வெளியிட்டுள்ளது சன் குழுமும்.

நேற்று மாலை 5 மணிக்கு sun nxt app லும், மாலை 6 மணிக்கு சமூக ஊடகத்திலும் “சிம்ட்டாங்கரன்” பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியகி இருந்த நிலையில்.பாடல் வெளியான 4 மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்ட்டுள்ளது.

இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள சர்கார் படத்தின் அணைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதியுள்ளார். மேலும் நேற்று வெளியானசிம்ட்டாங்கரன் பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் நடிகை த்ரிஷா இந்த பாடல் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் “சிம்ட்டாங்கரன்” பாடலை குறிப்பிட்டு எப்போதும் போல ஏ ஆர் ரகுமான் என்று ட்வீட் செய்துள்ளார். தற்போது நடிகை த்ரிஷா ரஜினி நடித்து வரும் “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.