அதுக்குள்ளையேவா..? சர்கார் முதல் நாள் டிக்கெட்டை இப்போதே வாங்கி அசத்தியுள்ள ரசிகர்கள்.!

0
698
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய்க்கு தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் படங்கள் தமிழ் மொழியில் வெளியாவது போலவே மற்ற மொழிகளிலும் வெளியாகி வருகிறது.

தற்போது நடிகர் விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் படு மும்மரமாக நடந்து வருகிறது.

- Advertisement -

பொதுவாக தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் போலவே நடிகர் விஜய்க்கு கேரளாவிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனால் விஜய் படங்கள் என்றாலே அங்கு ஒரு தனி மாஸ் தான்.அத்தோடு கேரளாவில் வெளியாக இருக்கும் “சர்கார்” படத்தின் கேரள வெளியிட்டு உரிமம் மட்டும் 9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வரும் தீபாவளியன்று தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாக இருக்கும் “சர்கார்” படத்தின் பீவர் தற்போதே கேரளாவில் தொடங்கி விட்டது. படம் வெளியாக ஒரு மாதம் இருக்கும் நிலையில் தற்போதே படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்களை கேரள ரசிகர்கள் வாங்கி அசத்தியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement