சர்கார் படத்தின் சிங்கிள் டிராக்கை இந்த சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் தான் பாடி உள்ளாரா..?

0
725
Sarkar
- Advertisement -

விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெற உள்ளது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

sarkar

- Advertisement -

மேலும், இசை வெளியிட்டு விழா முன்பாக வரும் வரும் செப்டெம்பர் 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு “சர்கார்” படத்தின் சிங்கள் டிராக் ஒன்று வெளியாகவுள்ளது என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது.

வரும் செப்டெம்பர் 25 ஆம் தேதி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் வரும் 24 ஆம் தேதி வெளியாவதாக இருக்கிறது. இந்த பாடலை விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் திவாகர் பாடி இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-

dhivagar

தமிழில் பல்வேறு பாடல்களை பாடியுள்ள பாடகர் திவாகர், சமீத்தில் வெளியான சீமராஜா படத்தில் இடம்பெற்ற “வரேன் வரேன் சீமராஜா” என்ற பாடலை பாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை “சர்கார்” படத்திலும் திவாகர் ஒரு முக்கிய பாடலை பாடியுள்ளாரோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement