சரோஜா படத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையா இது.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க..

0
16307
Nikitha
- Advertisement -

சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் என்னவானார்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பலரும் அறியப்பட்ட நடிகையான நிகீதாவும் ஒருவர். தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ், சரண் போன்றவர்கள் பலர் நடிப்பில் வெளியான ‘சரோஜா’ படத்தில் இடம்பெற்ற சூடான கோழி என்ற பாடல் அந்த காலகத்தில் இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. அந்த பாடலில் ஒரு கவர்ச்சியான நடனமாடி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை நிகிதா.

-விளம்பரம்-

மும்பை பூர்வீகமாக கொண்ட இவர் 2002 ஆம் ஆண்டு இந்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியல் தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதன்பின்னர் 2002ஆம் ஆண்டு வெளியான ‘ஹாய்’ என்ற தெலுங்கு படத்தில் இவருக்கு சினிமாவில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இவர் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு வெளியான ‘குறும்பு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் இரண்டாம் கதாநாயகியாக தான் நடித்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ சிபிராஜ் நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘போங்கு ‘ என்ற படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தோன்றி இருந்தார். தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும். என்றாலும் கன்னடத்தில் ரொம்ப பேமஸ். இவர் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக தர்ஷனின் மனைவி கன்னட திரைப்பட சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த விஷயம் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும், தர்ஷன் மனைவி அளித்த புகாரின் பேரில் இவர் மீது கன்னட சினிமா சங்கம் நடவடிக்கையை எடுத்தது. இதனால் நிகிதாவிற்க்கு கன்னட திரைப்பட சங்கம் கடந்த 2011ம் ஆண்டு 3 ஆண்டுகள் தடை விதித்தது இருப்பினும் தெலுங்கு, மலையாளம் தமிழில் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததாலும், முன்னணி நடிகையாக வளம் வர முடியாததாலும் நிகீதா கடந்த 2017 ஆம் ஆண்டு ககன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் நிகிதா கங்கா தம்பதியருக்கு ஒருஅழகான பெண் குழந்தையும் இருக்கிறது. சமீபத்தில் நிகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இதோ அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வர நடிகை நிகீதாவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று ரசிகர்கள் ஆச்சர்யபட்டு வருகின்றனர். இதுவரை நிகிதா தமிழில் 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், 25 கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். மேலும், நல்ல கதாபாத்திரம் என்றால் தற்போதும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார் நிகீதா.

-விளம்பரம்-
Advertisement