நட்சத்திரம் நகர்கிறது நடிகையா இது ? முதன் முறையாக நீச்சல் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள். கமண்ட் பகுதி Off.

0
547
dushara
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக துஷாரா விஜயன் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சர்பட்டா பரம்பரை’ படத்தில் ‘மாரியம்மா’வாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். இந்த படத்தில் பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இந்த படத்தின் மூலம் ஆர்யாவின் திரைப்பயணம் மாறியது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை துஷாரா விஜயன் தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சமில்லாத முகம் தான். ஆனால், இந்த படத்தில் இவரது நடிப்பு பாரட்டப்பட்டுகளை பெற்றது.

- Advertisement -

பலரும் சார்பட்டா பரம்பரை படம் தான் துஷாரா விஜயன் முதல் படம் என்று நினைத்து இருக்கிறார்கள். ஆனால், இவர் ஆரம்பத்தில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். மேலும், இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். அதற்கு பிறகு 2019 ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக பேசவில்லை. அதனை தொடர்ந்து இவர் பல குறும்படங்களில் நடித்திருந்தார்.

அதற்கு பிறகு தான் ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பின் சர்பட்டா பரம்பரை படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இறுதியாக இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன், அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள்நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்துஇருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தத்த்து. அதிலும் இந்த படத்தில் மற்ற நடிகர்களை விட துஷாராவின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்தது.

இந்த் படத்தில் ஒரு துணிச்சல் மிக்க பெண்ணாக ரெனே என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் துஷாரா விஜயன். இதனை தொடர்ந்து தற்போது இவர் வசந்தபாலன் இயக்கத்தில் ‘அநீதி’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படி ஒரு நிலையில் துஷாரா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். ஆனால், இந்த பதிவில் கமண்ட் பகுதியை லிமிட் செய்து இருக்கிறார்.

Advertisement