ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படம் 1975ன் பிற்பகுதியில் நடக்கும் இரண்டு பிரிவுகளுக்கு இடையிலான பாக்சிங் போர் பற்றிய கதை தான். பொதுவாக ரஞ்சித் பாடங்கள் ஜாதி ஆடையாளங்களில் சிக்கிவிடும், ஆனால், இந்த படத்தில் அது இல்லை என்றாலும் மிசா தடைச்சட்டம் ஆட்சி கலைப்பு இனவாதத்தை கடுமையாக சாடிய குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றவற்றின் மூலம் தன்னுடைய அரசியலை பேசியிருக்கிறார் ரஞ்சித்.

இதையும் பாருங்க : இதை நான் உங்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன் சார் – சார்பட்டா நடிகர் போட்ட சர்ப்ரைஸ் பதிவு. என்ன காரணம் தெரியுமா ?

Advertisement

இந்த படம் முழுவதும் தி மு கவின் ரெஃபெரென்ஸ் நிரம்பி வழிக்கிறது. மிசா தடைச்சட்டம் ஆட்சி கலைப்பு இனவாதத்தை கடுமையாக சாடிய குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றவற்றின் மூலம் தன்னுடைய அரசியலை பேசியிருக்கிறார் ரஞ்சித். படத்தின் பல்வேரு காட்சிகளில் தி மு கவை பற்றிய ரெஃபெரன்ஸ் நிரம்பி வழிகிறது. கருணாநிதிக்கு திரைக்கதை வசனம் எழுதிய படங்கள் தவிர விரல்விட்டு எண்ணக்கூடிய சில படங்களில்தான் திராவிட கருத்துகளையும் திமுகவைப் பற்றியும் திரைப்படத்தில் காட்டப்பட்டன.

ஏன், திமுக தலைவர் கருணாநிதி பேரன்கள் உதயநிதி, அருள்நிதிகூட தங்கள் படங்களில் திமுகவைப் பற்றி காட்ட, பேசவில்லை. ஆனால், பா.ரஞ்சித் எமர்ஜென்ஸி காலத்தில் மெட்ராஸில் திமுகவினர் எப்படி செயல்பட்டார்கள் என்று எந்த பிரசாரமும் இல்லாமல் சர்பட்டா பரம்பரையில் துணிச்சலாக காட்டியுள்ளார்

Advertisement

பொதுவாக தமிழ் திரைப்படங்களில் எந்த ஒரு கட்சிப் பெயரையும் நேரடியாக குறிப்பிட்டது கிடையாது. வட சென்னை படத்தில் கூட அதிமுக கட்சியை பற்றி நேரடியாக பேசி இருப்பார் வெற்றிமாறன். இப்படி ஒரு நிலையில் அந்த படத்திற்கு பின்னர் ஒரு கட்சி பெயரை வெளிப்படையாக சொன்ன இரண்டாம் படம் இது தானா என்று ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

Advertisement

அதே போல எந்த கட்சி ஆளுங்கட்சியோ அதற்கு ஆதரவாக தான் படம் எடுக்க முடியும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. ஆனால், சார்பட்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்டாலின் ஆட்சிக்கு வரும் முன்னரே துவங்கிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல ரஞ்சித் ஒரு பெரியார் கொள்கையை பின்பற்றி வரும் நபர் என்பதால் தான் அவர் இப்படி தி மு கவிற்கு ஆதராக பல காட்சிகளை வைத்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement