இதை நான் உங்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன் சார் – சார்பட்டா நடிகர் போட்ட சர்ப்ரைஸ் பதிவு. என்ன காரணம் தெரியுமா ?

0
3181
ajith
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படம் 1975ன் பிற்பகுதியில் நடக்கும் இரண்டு பிரிவுகளுக்கு இடையிலான பாக்சிங் போர் பற்றிய கதை தான். பொதுவாக ரஞ்சித் பாடங்கள் ஜாதி ஆடையாளங்களில் சிக்கிவிடும், ஆனால், இந்த படத்தில் அது இல்லை என்றாலும் மிசா தடைச்சட்டம் ஆட்சி கலைப்பு இனவாதத்தை கடுமையாக சாடிய குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றவற்றின் மூலம் தன்னுடைய அரசியலை பேசியிருக்கிறார் ரஞ்சித்.

இதையும் பாருங்க : குட்டையான பாவாடை மற்றும் உள்ளாடையில் போஸ் கொடுத்து கதி கலங்க வைத்த ஷாலினி பாண்டே.

- Advertisement -

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் வேம்புலி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்யாவிற்கு நிகரான ஒரு ரோலில் நடித்து இருப்பவர் ஜான் கொக்கென். நடிகர் ஜான் கொக்கென், ஏற்கனவே தல அஜித்தின் வீரம் படத்தில் அவர் தம்பியாக நடித்து இருந்தார். தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வேம்புலி கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பை அஜித்துக்குச் சமர்ப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ள ஜான் கொக்கென், நன்றி தல அஜித் சார். நான் என்னையே நம்புவதற்கு எப்போதும் நீங்கள்தான் உத்வேகம் அளித்து உற்சாகப்படுத்தினீர்கள். ‘வீரம்’ படப்பிடிப்பின்போது உங்களுடன் நான் செலவழித்த நேரம் என் வாழ்க்கைக்கான பாடமாக மாறியது. ஒவ்வொரு நாளும் கடின உழைப்பைச் செலுத்த நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். அதுமட்டுமல்ல நல்ல மனிதராக இருக்கவும் நீங்களே எனக்குக் கற்றுத் தந்தீர்கள். வேம்புலி கதாபாத்திரத்தை நான் உங்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன் சார். என்றும் அன்புடன் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement