ப ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.
இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அதே போல் இந்த படத்தின் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர்.
இதையும் பாருங்க : பஸ்ல யாரோ இடிச்சிட்டாங்கனு நெனச்சிக்கோனு சொல்லிட்டாங்க – கதறி அழும் பொன்தாரணியின் அம்மா மற்றும் சகோதரர்.
இதில் கலையரசன் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜனை ஏற்கனவே ‘ஜகமே தந்திரம்’ படத்தில் பார்த்திறருப்பீர்கள். ஆனால், இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சமில்லாத முகம் தான். இந்த படத்தில் இவரது நடிப்பும் பெரிதும் பாரட்டப்பட்டுகளை பெற்றது.
அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற வம்புல தும்புல பாடலில் இவர் போட்ட குத்து ஆட்டம் படு வைரலானது, இவரது பெயர் துஷாரா விஜயன். இவர் ஏற்கனவே தமிழில் ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் சட்டை பட்டனை துறந்த ஒரு பக்கம் சட்டையை இறக்கி படு கவர்ச்சியான போஸ்களை கொடுத்து இருக்கிறார்.