ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்த இந்த படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரமபமானவர் ஜான் கொக்கன்.,

இவர் சார்பட்டா படத்திற்கு முன்பே அஜித்தின் வீரம், ராஜமௌலியின் ‘பாகுபலி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அதுவும் பாகுபலி படத்தில் வரும் காலகேயர் கூட்டத்தில் தான் இவர் நடித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், பாகுபலியில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். சூட்டிங் செய்தபோது என்னுடைய பெயர் கூட யாருக்கும் தெரியாது.

இதையும் பாருங்க : சிங்கம் மாதிரி இருந்த மனுஷன இப்படி வீல் சேர்ல தள்ளிட்டு போறாங்க – ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.

Advertisement

ஆனால் அப்போதே என்னிடம் சொல்லிக் கொண்டேன் ஒருநாள் என்னுடைய பெயர் அனைவருக்கும் தெரியும் என்று சார் பட்டா படத்தின் மூலம் அந்த நாள் வந்தது இதை நான் பெருமையுடன் பகிர்வதற்கு காரணம் அஜித் சார் சொல்வது போல வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் இருக்கும் நாம்தான் சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டும் உங்களால் முடியும் என்று நம்ப வேண்டும் என்று அவர் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

சார்பட்டா திரைப்படம் வெடியாகி அவரை பலர் பாராட்டிய போது ”என்னை எப்பொழுதும் ஊக்குவிப்பதற்கும் மற்றும் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்ததற்கும் நன்றி அஜித் சார். நான் கடினமாக உழைப்பதற்கும் ஒரு நல்ல மனிதனாக இருப்பதற்கும் நீங்கள் தான் இன்ஸ்பிரேஷன். நான் இந்த வேம்புலி கதாபாத்திரத்தை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். லவ் யூ சார்” என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Advertisement

அந்த பதிவு மிகவும் வைரலானது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், அஜித் குறித்து பேசுகையில், வீரம் படத்தின் போது அஜித் எனக்கு பல அறிவுரைகளை கூறி இருந்தார். அவர் மிகவும் சிறந்த மனிதர். நான் அவருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாக ட்வீட் போட்ட பின் எனக்கு போன் செய்து, இதே போல போய்கொண்டே இருங்க, நான் எதுவும் பண்ணல எல்லாம் உங்கள் ஹார்ட் ஓர்க் தான் என்று சொன்னார்’ என்று கூறி இருந்தார் ஜான்.

Advertisement
Advertisement