சிங்கம் மாதிரி இருந்த மனுஷன இப்படி வீல் சேர்ல தள்ளிட்டு போறாங்க – ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.

0
4014
vijayakanth
- Advertisement -

விமான நிலையத்தில் வீல் சேரில் அழைத்து செல்லப்பட்ட விஜயகாந்த்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதி பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில காலமாக இவர் உடல் நிலை தெரிவதாகவும் விரைவில் பழையபடி வருவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

கடந்த 2018ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சென்னை திரும்பிய அவர் மருத்துவ பரிசோதனைக்காக அவ்வப்போது தனியார் மருத்துவமனைக்குச் சென்று வருகிறார். உடல் நல குறைவால் கட்சி பணிகள், அரசியல் பொதுக்கூட்டங்கள் என்று எதிலும் தலையிடாமல் தான் இருந்து வருகிறார் விஜயகாந்த்.

- Advertisement -

தற்போது தே மு தி கவின் கட்சி முடிவுகளை கூட விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தான் அறிவித்து வருகிறார். கட்சியையும் அவர் தான் தற்போது கட்டி காத்து வருகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. இருப்பினும் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் வெறும் கையை மட்டும் அசைத்துவிட்டு தான் வந்தார்.

இந்நிலையில், கொரோனா கட்டுப்படுகள் காரணமாக உடல் பரிசோதனை செய்ய அமெரிக்கா செல்ல முடியாமல் இருந்த நிலையில், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு விமானநிலையம் வந்த விஜயகாந்த் முழு உடலையும் மறைக்கும் வகையில் கோட் அணிந்திருந்து, தொப்பி மற்றும் மாஸ்க் கொண்டு முகத்தையும் மறைத்திருந்தார்.அவருடன் அவரது இளைய மகன் சண்முகபாண்டியனும் சென்றார். 

-விளம்பரம்-
Advertisement