சதுரங்கவேட்டை பட நடிகையை ஞாகபம் இருக்கா ? துபாய் மாப்பிள்ளை, கை குழந்தைன்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

0
4657
banu
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வரும் வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை படத்தில் நடித்த நடிகையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். வினோத்தின் முதல் படமான ‘சதுரங்க வேட்டை ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தி படத்தில் நட்டி நாகராஜ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக இஷாரா நாயர் என்பவர் நடித்திருந்தார்.தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான ‘வெண்மேகம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-62.png

அதன் பின்னர் தமிழில் பப்பாளி, இவன் யாரென்று தெரிகிறதா, பப்பரப்பாம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சதுரங்க வேட்டை படத்தில் குடும்பப்பாங்கான பெண்ணானாக இருந்த இவர் நிஜத்தில் படு மாடர்ன் பெண்ணாக இருந்து வருகிறார்.

- Advertisement -

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயை சேர்ந்த சஹில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மிகவும் எளிமையாக நடைபெற்ற திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் துபாயில் செட்டில் ஆன இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

This image has an empty alt attribute; its file name is image-61.png

திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். இவர் தற்போது எங்கடா இருந்து வரீங்க நீங்க எல்லாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவரது கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement