மோடி பயோபிக் படத்தை இவர்கள் தான் இயக்க வேண்டும் என்று சத்யராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் “கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தன்பக்கம் கட்டி போட்டவர் சத்யராஜ். கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டு வருகிறார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். அதிலும் இவர் நடித்த பெரியார் படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றிருந்தது. சொல்லப்போனால் பலரும் இவரை தான் பெரியார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சத்யராஜ் திரைப்பயணம்:
அதற்குப் பின் பாகுபலி கட்டப்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் கட்டப்பா என்றாலே இவர் தான் நினைவுக்கு வருவார். தற்போது சத்யராஜ் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படம் உருவாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.

மோடி பயோபிக் படம்:
பிரதமர் மோடி உடைய வாழ்க்கை வரலாற்று படத்தை இந்தியில் எடுக்க இருக்கிறார்கள். இதில் மோடியாக சத்யராஜ் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பலருமே சத்யராஜுக்கு வாழ்த்தியும் சிலர் விமர்சித்தும் இருந்தார்கள். ஹிந்தியில் உருவாகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற ஐந்து மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த படத்தை எடுக்க இருப்பதாகவும், இந்த ஆண்டு இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாக இருக்கின்றது.
பட விழாவில் சத்யராஜ்:
இந்த நிலையில் மோடி பயோபிக் படம் தொடர்பாக படவிழாவில் சத்யராஜ் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் மேகா ஆகாஷ், தனஞ்ஜெயா, பிரித்திவி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

சத்தியராஜ் கொடுத்த பதிலடி:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் படக்குழுவினர் உடன் சினிமா பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சத்யராஜ், மோடி பயோபிக் படத்தில் நடிக்க யாருமே என்னிடம் கேட்கவில்லை. அப்படியே நடித்தாலும் என்னுடைய நண்பன் மணிவண்ணன் போல் ஒரு சிறந்த ஒரு இயக்குனர் எடுத்தால் நன்றாக இருக்கும். அவர் தத்ரூபமாக எடுப்பார். அவர் இப்போது இல்லை. விஜய் மில்டன் அப்படியே இருக்கலாம். இருந்தாலும் வெற்றிமாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் மோடி பயோபிக் படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.






