ஒரு நாளுக்கு சம்பளம் இவ்வளவா ? இந்தியனுக்கு கட்டப்பா சத்யராஜ் கொடுத்த ஷாக்.

0
495
indian
- Advertisement -

இந்தியன் 2 படத்திற்காக ஒரு நாளைக்கு சத்யராஜ் கேட்டிருக்கும் சம்பளம் கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் “இந்தியன்”. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வந்தது.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், ‘இந்தியன் 2’ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து:

வெற்றிகரமாக படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. அப்போது கமலஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே சமயம் நடைபெற்று முடிந்த சட்ட மன்ற தேர்தலில் கமல் பிசியாக இருந்ததால் அவர் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து இருந்தார்கள்.

indian2

மீண்டும் தொடங்கிய இந்தியன் 2:

அதில் 8 பேர் படுகாயமடைந்து இருந்தார்கள். இதனால் படப்பிடிப்பு நின்று விட்டது. இப்படி பல பிரச்சனைகளின் நடுவில் இந்தியன் 2 திரைப்படம் எப்போ தொடங்கப்படும்? என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் சங்கர் அவர்கள் பேட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறி இருந்தார். அதன்படி செப்டம்பர் மாதம் மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. மேலும், இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார்.

-விளம்பரம்-

படத்தில் செய்த மாற்றம்:

அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது. ஆனால், விவேக் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமாகி இருந்தார். தற்போது விவேக் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு ஜோக்கர் திரைப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் தான் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் பட்டத்தில் நெடுமுடி வேணு கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம்? என்று படக்குழு ஆலோசித்து இருந்தது. அப்போதுதான் நெடுமுடி வேணு கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.

சத்யராஜ் கேட்ட சம்பளம்:

இந்நிலையில் இது குறித்து சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவரிடம் 15 நாட்கள் கால் சீட்டும் கேட்டிருந்தார்கள். அப்போது சத்யராஜ் படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை கேட்டு இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஷாக் ஆகியிருக்கிறார்கள். மீண்டும் சத்யராஜிடம் சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement